பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை I 05 "யார் அந்தத் துரோகி சொல்லுங்க! அவனை நான் கவனிச்சுக்கிறேன். சட்டத்தின் பிடியிலே அகப்படாதவன் இந்த உலகத்திலே அப்படி யார் இருக்க முடியும்?" "அப்படியா?" "சொல்கிறேன். அத்யந்த நண்பரான உங்க கிட்டே கூடிய விரைவிலே சொல்லிவிடுகிறேன், அந்தத் துரோகியைப் பற்றி!" "நல்லதுங்க. கெட்டவர்களை நாம் மன்னிச்சு அவர்களை ஒரு போதும் இந்த மண்ணிலே விட்டு வைக்கப்படாதுங்க!” என்று தீர்மானத் தொனி கூட்டிச் சொன்னான் பூமிநாதன்! "ஆமாம்!" என்று ஆமோதித்தான் அம்பலத்தரசன். அவன் நெற்றித் திட்டில் சிந்தனை ஒடிக் கிடந்தது. "என் ரெவ்யூவைப்பற்றி ஒண்ணுமே சொல்லலையே?" என்று பேச்சின் போக்குக்குப் புது வடிகால் அமைத்தான் அவன். "பார்த்தீங்களா, மறந்துவிட்டேன். எனக்கு ஏதேதோ ஞாபகம்! உங்க விமர்சனம் ரொம்பவும் சரியாக இருந்திச்சு உங்க விமர்சனம் மூலம் என் நடிப்புக்கு ஒரு மவுஸ் பிறந்திட்டுதுங்க. புதுசா ஒரு சினிமா பார்ட்டி எங்கிட்டே மூவ் பண்ணியிருக்காங்க!" "அப்படியா? கங்க்ராச்சுலேஷன்ஸ்!" பேச்சுவார்த்தை முடியட்டும். ஆனா எங்க அப்பாருக்குத்தான் இதிலே துளியும் விருப்பம் இல்லை. நான் கெட்டுப் போயிடுவேன் என்று பயப்படுறாங்க!..." "ஒஹோ?" “ஊர்வசியைப் பற்றின நாடக விமர்சனம் எப்படி இருந்திச்சுங்க பூமிநாதன்?" ; : . . . - "மிஸ் ஊர்வசியைப் பற்றித்தான் ஸ்பெஷலாக எழுதியிருந்தீங்களே ஒரு விஷயத்தைச் சொல்லனும், கற்பழிக்கப்பட்ட கதாநாயகிக்கு சமூகம் ஆதரவு தர வேணும்னு நீங்க கதாசிரியருக்கு அட்வைஸ் பண்ணியிருந்ததை நானும் வரவேற்கிறேனுங்க, அம்பலத்தரசன் கெடுக்கப்பட்ட கதாநாயகிக்குக் கடலை அடைக்கலம் தந்ததாய் காட்டின முடிவை