பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பூவை எஸ். ஆறுமுகம்



ஒத்திகையிலேயே நான் பாராட்டினேன்... ஆனா இப்போ அந்த முடிவு அர்த்த மற்றதாகத்தான் தோணுது எனக்கு ஆதரவு இழந்த அபலைப் பெண்களுக்கு, இப்படிப்பட்ட மோசடிகளுக்குத் தங்களையும் மீறி ஆளாகிற, அல்லது ஆளாக்கப்படுகிற அபலைப் பெண்களுக்கு இந்தத் தமிழ்ச் சமுதாயம் ஈவிரக்கம் காட்டி அவர்களையும் வாழவைப்பதிலே தான் தமிழ்ப் பண்பாடு செழிக்க முடியும் என்கிற உங்க வாதத்தை நான் மனப்பூர்வமாய் ஆதரிக்கிறேனுங்க. இம்மாதிரியான ஒரு கடமைக்கு எப்போதுமே நான் தயாராகவும் இருப்பேனுங்க!" "நிஜமாகவா, மிஸ்டர், பூமிநாதன்?" "நிஜமாகத்தான்!" "சத்தியமாகவா?" "சத்தியமாகத்தான், அம்பலத்தரசன்!” அம்பலத்தரசன் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து, பூமிநாதனை ஆரத் தழுவிக்கொண்டான். அவன் விழிகள் பனி பெய்தன. "நீங்களும் இம்மாதிரியான கடமையைச் செய்துகாட்டப் பின் வாங்க மாட்டிங்கண்ணுதான் நான் நம்புகிறேன்!” அம்பலத்தரசனை நோக்கிச் சொன்னான் பூமிநாதன். "ஆவணி பிறக்கட்டும். உங்களுக்கு என் சித்தாந்தம் புரியும் ... நான் செயல்முறையிலே செய்து காட்டத்தான் போகிறேன்! எழுதுபவன், நடிகனாக இருக்கக் கூடாது! நான் அந்தரங்க சுத்தியோடுதான் எழுதினேன், பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்ட நல்ல பெண்களுக்கும் புதுவாழ்வு கொடுக்கப்பட வேண்டுமென்று ஆகவே, இப்போது என் எழுத்தையே மனோதர்மமாகக் கொண்டு உதாரணமாக்கிக் காட்டத் தயாராகவும் இருந்திட்டுவருகிறேன்! அதற்குகந்த வாய்ப்பும் எனக்குத் தெய்வாதீனமாய்க் கை கூடியிருக்குது! இதோ பாருங்க, இந்தப் பூப் பொட்டலத்தை! இது என் காதலிக்கு என் அனுதாபத்துக்குரிய அந்த அபலைக்குத் தான் இந்தப் பொட்டலம்!" முத்துக்கள் அம்பலத்தரசனின் அழகிய விழிகளைத் துறந்தன. . . ரோஜாமடல்கள் தெரிந்தன.