பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

107



"நீங்க ஒரு அதிசய புரு ஷர், மிஸ்டர் அம்பலத்தரசன்!" அம்பலத்தரசைக் கையெடுத்துக் கும்பிட்டான் பூமிநாதன். "கும் பிடாதீங்க. அவ்வளவு பெருமைக்குரியவனல்ல நான். நான் மனிதன். மனிதனாகவே வாழ விரும்புகிற ஒரு மனிதன் நான். அவ்வளவுதான்!" இப்போது தொண்டையைக் கனைத்துக் கொண்டான் பூமிநாதன். சிகரெட் பற்றியது. ஒரு குவளை தண்ணீரைப் பருகினான். புகைச் சுருள்கள் மிதந்தன. "நான் கூட, கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன். என் கல்யாண விஷயமாய் உங்ககிட்ட சில ஆலோசனைகளைக் கலக்கத்தான் உங்களைத் தேடி வந்தேன்!" என்று ஆரம்பித்தான், சீமான் பெற்ற செல்வமான பூமிநாதன். - "அப்படியா? ரொம்ப வொண்டராக இருக்கு உங்களுக்கு நான் யோசனை கூறுவதா?..ம்... சொல்லுங்களேன்!" என்று அம்பலத்தரசன் அவனைத் துண்டிக் கொண்டிருக்கையில், "வரலாமா?" என்ற பெண்ணின் நளினக் குரல் கேட்டுத் தன் செவிகளைத் திருப்பினான் அம்பலத்தரசன். அவனுடைய முகம் மலர்ந்தது; மகிழ்ந்தது. "வா, ஊர்வசி!" என்று வரவேற்றான் அம்பலத்தரசன்.