பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

பூவை எஸ். ஆறுமுகம்



வரவேணும் அவங்க விமர்சனம் எழுதினவங்க. நீங்க எனக்கு வில்லனாய் நடிச்சவங்க!..." அம்பலத்தரசன் மீதிருந்த ஒரக் கண்பார்வையை நயமுடன் திருப்பிப் பூமிநாதனை உன்னிப்பாகப் பார்த்துச் சொன்னாள் அவள். "விருந்துக்கு வராமல் இருக்க முடியுமா? பேஷாக வருகிறேன்!” என்று உரைத்தான் அம்பலத்தரசன். ஆனால், பூமிநாதனிடமிருந்து யாதொரு பதிலும் கிளம்பவில்லை. "ஐயா, நீங்க... ' துண்டினாள் ஊர்வசி. "வருகிறேனே!..." என்று தடுமாற்றத்துடன் பூமிநாதன் சொன்னான். கைக்குட்டையைக் கொய்து முகத்தைத் துடைத்தான். புதிய மீசை பத்திரமாகவே இருந்தது. துடைக்கத் துடைக்க இப்படி வேர்வை ஆறாகப் பெருகி வழிகிறதே? கீழ்த்தளத்துக் கடிகாரம் பதினொன்று அடித்தது. இப்போது டெலிஃபோன் மணி அடித்தது. அம்பலத்தரசன் எடுத்தான். "52196 ஹியர்...எஸ்... யார் நீங்களா? உங்க பையனுங்களா? இருக்காரே?"என்றான். "மிஸ்டர் பூமிநாதன், உங்களை உங்க அப்பா அழைக்கிறாங்க. நேற்று ராத்திரி கூட உங்களை விசாரிச்சாங்க; சொன்னேனல்லவா?... உங்களைப் பிரிஞ்சு உங்க அப்பா ஒரு செகண்ட்கூட இருக்கமாட்டாங்க போல...ஊம்... பேசுங்க!" பூமிநாதன் பேசினான். "என்ன, நான் உடனே வரணுமா? சரிங்க!" என்று சொல்லி ரிலீவரை அதற்குண்டான இடத்தில் பொருத்தினான். - "ஊர்வசி, நான் எங்க பங்களா வரை போயிட்டுத் திரும்பிடுகிறேன். கட்டாயம் உங்க விருந்திலே கலந்துக்கிடுவேன். பயப்படாதீங்க. உங்க அன்பை என்னாலே எப்போதும் மறக்க இயலாதுங்க," என்று சொல்லி எழுந்தான், பூமிநாதன். ஊர்வசியின் சிவந்த முகம் கறுத்து வந்தது. "நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நானே உங்க வீட்டுக்கு, மன்னிச்சிடுங்க, உங்க பங்களாவுக்கு வந்து உங்களைச் சந்திக்க வேணும்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்.... நல்ல வேளையாய், நீங்களே வழி