பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை 1 Í i மறிச்சுத் தரிசனம் கொடுத்து நீங்க இங்கே இருந்திட்டீங்க. நீங்க தான் இண்ணக்கி எங்க வீட்டின் பிரதம விருந்தாளி. வாங்க. அரைமணிக்குள்ளே உங்களை அனுப்பிவைச்சுப்பிடுறேன்!" என்று" வற்புறுத்தினாள் அவள் வெள்ளைக்கல் மூக்குத்தி பளபளத்தது. 'எங்க அப்பா இருந்திருந்தால் என்னோட கலைத்தொண்டைக் கண்டு இந்நேரம் ஒரு பெரிய டின்னருக்கே அரேஞ் பண்ணியிருப்பார். அவர் காலம் முடிஞ்சு பல காலமாயிடுச்சு. எங்க சொத்து பத்து, நிலம் நீச்சைக் கொண்டு என்னை எங்கம்மா காப்பாத்துறாங்க. ஏதோ, இந்த ஏழைவீட்டு எள்ளுருண்டையை உங்களைப் போல உள்ள பெரிய இடத்துப் பிள்ளைங்க பெரிய மனுசங்க, பெரிய மனசு பண்ணிச் சாப்பிட்டால் அதுதான் எனக்குப் பரம திருப்தி தரும்!...." என்று தொடர் சேர்த்து நிறைத்தாள் ஊர்வசி. "ஆமாம், மிஸ்டர் பூமிநாதன்!... இவ்வளவு தூரம் மனம் விட்டுச் சொல்றபோது, நீங்க வந்து சாப்பிட்டுப் போறதுதான் பண்பாக இருக்கும்!" என்றான் அம்பலத்தரசன். "ஒ கே!" என்று ஆமோதிப்புக் கொடுத்தான் பூமிநாதன். மீசை பத்திரமாக இருக்கிறதாவென்று நலியாமல் தடவிப் பார்த்துக் கொண்டான். பிறகு வலது பக்கத்துச் சட்டைப் பையைக் குனிந்து பார்த்து, அத்துடன் திருப்தியுறாமல் தடவியும் பார்த்தான். அந்த இடத்தில் அவன் இருதயம் இருக்க நியாயமில்லை! - அழும்பு பண்ணும் மழலையாக, மீண்டும் வீரிட்டது தொலைபேசி. ஆமாம், தொலைவிலிருந்துதான் இப்போது பேசியது. - இடது கையை நீட்டினான் அம்பலத்தரசன். "அம்பலத்தரசன் பேசுறேன். யார் கருணாநிதியா? எந்தக் கருணாநிதி ஒஹோ, நீயா? சொல்லு என்ன, அப்படியா? ஊம், உன் இரும்புப் பெட்டியும் என் இரும்பு நெஞ்சமும் மோதட்டும், தான் ரெடி இன்றாவது உனக்கு மீசை துடித்ததே பேஷ் ஒரு கையென்ன. இரண்டு கையாலேயும் என்னைப் பார்த்துக் கொள். பாவம், உனக்குத் திடுதிப்னு கண்ணும் ரிப்பேராகிடுச்சோ ஓர் அபலைப் பெண்ணைப் பலவந்தப்படுத்திக் கற்பழிச்சு, அந்தத் துன்பம் தாங்காது, அவள் ஏழை அப்பன் உன் கிட்டே வந்து தன் மக்ளை