பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

பூவை எஸ். ஆறுமுகம்



ஏற்றுக்கிடும்படி கெஞ்சிக் கூத்தாடியும், நீ மனசைக் கல்லாக்கிக்கிட்டு, அவங்களைத் துரத்தியடிக்க, அந்த அபவாதத்தின் நரக வேதனையிலே அந்தப் பெண்ணும் அவள் அப்பனும் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்களே?... அந்தப் பழியும் அந்தப் பாவமும் உன் கண்ணைக் கட்டாயம் கெடுத்துத்தான் இருக்கும் இருதயம் ரிப்பேரான துரோகி நீ உன்னோடு பேசுறது கூட மகாபாவம்" என்று கர்ஜனை செய்து விட்டு, ஆத்திரம் மூள டக் கென்று தன் பேச்சைத் துண்டித்துவிட்டான், அம்பலத்தரசன். கறுத்து, மீண்டும் சமனப்பட்டுக் களைகட்டித் திகழ்ந்த ஊர்வசியின் முகம், மறுபடி கறுத்து விட்டது. பூமிநாதன் வேர்வையைத் துடைத்தவாறு, என்னங்க?" என்று கேட்டான். "நடப்புத்தான், என் பேச்சிலிருந்து பெரும்பாலும் உங்களுக்குப் புரிசிருக்குமே! பாவி ஒருத்தனுக்கு முச்சந்தியிலே நேற்று ராத்திரி நல்ல பாடம் சொல்லிக் கொடுத்தேன். அடிப்பட்ட கழுதை கத்துது ஏழை அம்பலத்தரசன்னு இளக்காரமாய் நினைச்சிருக்கான் அந்தப் பணக்காரர் வீட்டுப் பிள்ளையாண்டான் தெய்வத்துக்குப் பதில் சொல்லவேண்டிய கடமை மிச்சமிருக்கிற ரகசியம் இன்னமும் அவனுக்குத் தெரியலை, பாவம்!" ஊதுவத்தியின் இருப்பிடம் தெரியவில்லை. அதன் சுகந்தம் மட்டிலும் இன்னமும் கமழ்ந்து கொண்டிருந்தது. சாம்பல் தூள் காற்றில் சிதறியது. - “புறப்படலாமா, பூமிநாதன்?" என்று எழுந்தான் அம்பலத்தரசன். முகத்தில் தெளித்திருந்த நீரைத் துடைத்தான். சிந்தனையின் லயிப்பில் கட்டுண்டிருந்த பூமிநாதனை தோளைப் பற்றி மெல்லத் தட்டினான் அவன். - "ஒ" என்று எழுந்தான் பூமிநாதன். அறைக்கதவுகள் மூடிக் கொண்டன. கதவுகளுக்கு இதயம் இருந்தது. அவர்கள் மூன்று பேரும் வெளியேதான் நின்றார்கள்.