பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

பூவை எஸ். ஆறுமுகம்



பாயை எடுத்து உதறி விரித்தாள் ஊர்வசி, மேலாக்குச் சரிந்து விழுந்து விடாமல் காத்துக் கொண்டாள். "உட்காருங்க ரெண்டு பேரும், " என்று உபசாரம் செய்தாள். சொற்களில் பதட்டம் இருந்தது. கண்களின் கரு மணிகளில் ஈரம் இருந்தது. அம்பலத்தரசனும் பூமிநாதனும் பாயில் உட்கார்ந்தார்கள். அவர்கள் இரு வரையும் பார்த்து, "ஒரு நிமிஷம் இருங்க; இதோ, வந்திட்றேன்" என்று சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குச் சென்றாள். - . வினாடிகள் சிலவற்றை ஊமைக்கனவோடு விழுங்கியது மெளனம். - "நீங்க இங்கே இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா?" என்று மெளனத்தை வெட்டினான் பூமிநாதன். வீசிக் கொண்டிருந்த வேப்ப மரக் காற்றையும் மீறி, அவன் முகத்தில் வேர்வை துளிர்த்தவாறு இருந்தது. துடைத்துக்கொள்ளச் சளைக்கவில்லை அவன் கைகள். "என்னைக் கேட்கிறீங்களா? நான் இரண்டொருவாட்டி இங்கே வந்திருக்கேன், மிஸ்டர் பூமிநாதன்!... நீங்க...?" என்று அவனும் பதிலுக்கு ஒரு கேள்வியைத் தொடுத்தான். - "நான் இங்கே வர்றது. இதுவே முதல் தடவை. முந்தி ஒரு தரம் இங்கே என்னை வரச் சொல்லி அழைச்சாங்க ஊர்வசி. எனக்கு ஒழியலே. ஊர்வசிக்கு என் பேரிலே எப்பவும் ஒரு அன்பு. அது பேரிலே எனக்கும் எப்போதுமே அன்பு உண்டு!" என்று விளக்கினான் பூமிநாதன். காற்றை வேண்டித் தன்னுடைய சில்க் சட்டைப் பொத்தான்களைக் கழற்றி, சட்டையைத் தளர்த்தி விட்டபோது, அவனுடைய மார்பில் தெரிந்த அந்தரத்தத் தழும்பு இப்போதும் அம்பலத்தரசனைத் துண்டிலாக இழுத்தது. அம்பலத்தரசன் தன் நண்பனை ஏறிட்டுப் பார்த்தான். "பூமிநாதன், இதென்ன உங்க செஸ்ட்டிலே இவ்வளவு பெரிய காயம்?" என்று கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்டு வைத்தான். இக்கேள்வியைக் கேட்டதும், அதாவது, காது சாய்த்துக் கேட்டதும், பூமிநாதனின் முகம் சலனம் அடைந்தது. சலனம் ஒரு காத்திரைப் பொழுதுக்குத்தான் இருந்தது. பிறகு சமாளித்துக் கொண்டான். தன்னைத் தானே ஒரு முறை குனிந்து பார்த்தவனாக,