பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

119



பூமிநாதன் கண்களை விலக்கினான். விரிந்த விழிகள், ஊர்வசியை வெறிக்கப் பார்த்தன. அப்பார்வையில் பரிதாபம் கோலோச்சியது. நோக்கு இறங்கியது. கீழே கிடந்த அந்தத் தாலியையும் அந்தத் தூக்கமாத்திரைகளையும் அவள் கையிலெடுத்தான்! கண்ணிர் வெள்ளம் திரும்பவும் மடை திறந்தது. "ஊர்வசி இந்தத் தாலியை உனக்கென்று கொண்டாந்திருக்கேன் நான். இந்த முடிவுக்கு பிராயச்சித்தத்துக்கு நீ சம்மதிச்சு எனக்கு வாழ்வு கொடு. உன்னோட முடிவு என்னைக் கடைத்தேற்றும் இல்லைன்னா, இதோ, இந்தத் துக்க மாத்திரைகள் எனக்கு நல்ல முடிவு காட்டக் காத்திருக்கும்..." என்று தேம்பலானான் அவன். ஊர்வசி எழுந்து நின்றாள். துக்கமாத்திரைகள் எல்லாத்தையும் இப்படி என்கிட்டே கொடுங்க, மிஸ்டர் பூமிநாதன்!" என்றாள் அவள். நா தழுதழுத்தது. - அச்சம் கொழிக்க அவற்றை அவளிடம் நீட்டினான் பூமிநாதன்! "பூமிநாதன்! எழுந்திருங்க. எழுந்திருச்சுச் சாப்பிடுங்க...." என்று அன்பு தோய்த்து வேண்டினாள் ஊர்வசி. கண்ணிரும் புன்னகையும் கூடின. . . பூமிநாதன் எழுந்து தன் இலையைக் கணித்து உட்கார்ந்தான். மந்திரத்துக்கு கட்டுப்பட்ட பாவனை! . . "வாங்க அத்தான்; வந்து நீங்களும் சாப்பிடுங்க!” அம்பலத்தரசனும் சாப்பிடத் தயாரானான். நீர்மணிகள் சிதறின. அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் புதிய கண்ணோட்டத்தோடு பார்வையிட்டான் பூமிநாதன். அவன் கண்கள் சுட்டனவோ?... - - இரு விருந்தினர்களும் உணவு கொண்டனர். இருவருக்கும் மத்தியில், தாம்பூலத் தட்டை வைத்த்ாள் ஊர்வசி. - -- . . - ぷ※。 அம்பலத்தரசின் தாம்.ழ்ல்ம் திரிக்கித்தோடங்கின ான். "ஊம், நீங்களும் வெற்றிலை போட்டுக்கங்க. விருந்து சாப்பிட்டவங்க, வெற்றிலை போட்டுக்கிறதுதான்நம்பண்பாடுங்க்' பூமிநாதன்!" என்றாள் ஊர்வசி. விநயமான பேச்சு.