பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

பூவை எஸ். ஆறுமுகம்



இப்போது பூமிநாதனின் உதடுகள் சிவந்திருந்தது. சரி, இனி நீங்க புறப்படவேண்டிய வேளை வந்திட்டுது, கிளம்புங்க, மிஸ்டர் பூமிநாதன்!...” ஊர்வசி ஆணையிட்டாள். அவள் ஆணைக்கென்று இப்படியொரு தனி மகிமையா?... பூமிநாதன் பேய்பற்றியவன் போல தலை தெறிக்க ஒடத் தலைப்பட்டான்!... பூமிநாதனின் அந்தப் பாவப்பட்ட தாலி, விதியாகச் சிரிக்கிறதா?.... "ஊர்வசி...." நேசம் தேம்பியது. "மகளே!...” பாசம் கதறியது. நெற்றிப் பொட்டு, அன்புக் காட்டிப் புன்னகை பூத்துக் கொண்டிருந்தது!.. கண்ணிர்ப்பொட்டுகள், அன்பு கூட்டிச் சித்திக் கொண்டிருந்தன. அதே நேரத்தில்: பூர் தண்டு மாரியம்மன் சந்நிதியில் பார்வையாளர் கும்பல் கூடியது. உச்சி வெயில் எரிந்தது. . . மண்ணில் சாய்ந்து கிடந்தான் பூமிநாதன். அவனுக்கு வாயிலும் மூக்கிலும் ரத்தம் கொப்புளித்துக் கொண்டிருந்தது!.. ஆம்: வினை சிரித்த வேளையல்லவா அது?.. . வாழிய செந்தமிழ்.