பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் - இந்தப் பெயர் தமிழ்நாட்டில் நாற்பது ஆண்டு காலமாக - தமிழ் மக்களிடையே நின்று நிலைத்து விட்ட பெயர். - பூவை - சிறந்த நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர். கவிஞர். நாடகாசிரியர். பக்திப் பாடல்களை எழுதுவதில் வல்லவர்.

      • *

அவர் படைப்புகளில் தனிச் சிறப்பு, அவற்றில் கிராமிய மணங் கமழும். கிராம மாந்தர்தம் பேச்சு வழக்கு மிளிரும். பாத்திரங் களும் கிராம மண்ணுக்கேற்பவே விளங்குவர். பூவை - சிறந்த பத்திரிகை யாளர். அவர் பொன்னி மாத இதழ் மூலம் அறிமுகமானவர். அதன்பிறகு உமா இதழிலும் அவர் பணிதொடர்ந்தது. எழுபத்திரண்டு வயதிலும் சுறுசுறுப்பாய் இயங்கும் பூவை uó csr நீ சிரித்த வேளை’ சிறந்த - - بان بالا