பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

11



பரிதாபத்துக்குரிய பெண் அவள், கதையில் அனுதாபத்துக்குரிய பெண் அவள், நாடகத்தில், அவன் மனம் தனக்குத்தானே பேசிக் கொண்டது. பேச்சின் ஒலியும் எதிரொலியும் தடம் தேய்வதற்குள், அவனுக்கு அன்று காலை வந்த தன் அன்னையின் கடிதம் நினைவுக்கு வந்து விட்டது. ஏதேதோ சிந்தனை விரிசலுடன் ஒர் அரைக்கணம் அவன் தவயோகியின் நிலையில் கண்மூடி நின்றான். நிலவின் சீதனத்தை அவனால் நன்கு உணர முடிந்தது. நிலவின் சீதளத்தையும்தான்! டெலிஃபோன் மணி கண கன வென்று சத்தமிட்டது. தவம் கலையப் பெற்றுப் பரிதவிப்புடன், கண்களைத் திறந்தான், அம்பலத்தரசன். இமைகள் படபடத்தன. . ‘மணி பத்து இருபது, என்று சொன்ன் கைக் கடிகாரத்துக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு, அழைத்த தொலைபேசியை நாடி விரைந்தான் அம்பலத்தரசன். "அம்பலத்தரசன் ஸ்பீக்கிங் ஹியர்.....ஒ....! 'பூ' காரியாலயங்களா? சந்தோஷம்.....ட்ராமா ரெவ் யூதானே?.... எழுதி முடிச்சிட்டேனே! ஒரு க்ளான்ஸ் பார்த்திட்டுக் கொண்டு வரலாம்னு இருந்தேன். இதோ, இப்போதே புறப்பட்டு வர்றேன். ஸார்.... ஆமாம், விமர்சனத்தோட தான்!.... ஓ.கே. ..." பேசி முடித்தான். செய்தி வாங்கியை அதற்குகந்த இருப்பிடத்தில் பொருத்திய சத்தத்தை அவன் காதுகள் ஏற்றுக்கொண்ட் அதே நேரத்திலே, மாடிக் கதவுகள் படபட" வென்று தட்டப்படும் அரவத்தையும் அவன் காதுகள் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒர் இக்கட்டு உருப்பெற்றது. சலனம் அரவமாய் நெளிந்தது. . - : ". . . நேரம் கெட்ட நேரத்திலே யார் வந்து இப்படி அவதியோடு கதவைத்தட்டுகிறார்களோ, தெரியவில்லையே....'பூ' விலிருந்து ஆபீஸ் பையன்வருவதற்கும் மார்க்கம் இல்லை. பின் யாராக இருக்கக்கூடும்?...சீமான் மகன் பூமிநாதனாக இருக்கலாமோ? அவர் வில்லனாக நடித்த நாடகத்தைப் பற்றி என்ன விமர்சனம் எழுதியிருக்கிறேன் என்று கேட்டறிய வந்திருப்பாரோ? அவர் ரொம்பவும் மென்மையாக அல்லவா கதவைத் தட்டுவார் .