பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பூவை எஸ். ஆறுமுகம்



மென்மையை உணர்ந்த நல்லவராயிற்றே அவர்?... யாருக்கோ, என்னவோ துன்பம் நேர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் இவ்வளவு அவசரமாகக் கதவை இடிக்கிறார்கள்!.....இப்படிக் கதவை உடைப்பதை வீட்டுக்காரர் கேட்டால், உயிரையே விட்டு விடுவாரே? அவர் உயிரைக் கொடுத்து இக் கட்டடத்தைக் கட்டிய அருமை அவருக்குத்தான் தெரியும்....' என்று ஒரே வினாடியில் ஒருசில நினைவுகளைப் பின்னிய வண்ணம், மாடிப்படிகளின் வழியை அடைந்தான் அவன்; தாழ் விலக்கினான். என்ன விந்தை இது! நாடகக்காரி ஊர்வசி தலைவிரி கோலமாக நின்று கொண்டிருந்தாள் நாடகத்தில் வில்லனால் கற்பழிக்கப்பட்ட கட்டத்திலே தோற்றம் தந்த அதே கோலத்துடன் காட்சி தந்தாள்! நாடகம் முடிந்து நெடுநேரம் ஆகிவிட்டதே பின், ஏன் இந்த நிலை அவளுக்கு ஏற்பட்டது? வேடத்தை புனை வடிவத்தை மாற்றிக்கொள்ள மறந்துவிட்டாளா, என்ன? "ஐயா!...." அம்பலத்தரசன் அவளை ஏறிட்டு நோக்கினான். குமாரி ஊர்வசி ஆத்திரம் பொங்கிப் புரள நின்றாள். பட்டுக் கன்னங்கள் கன்றியிருந்தன. அங்கங்கே நகக் கீறல்கள் சில தட்டுப்பட்டன. வேடம் புனைய உதவிய அரிதாரத் தூள் காதோரங்களில் இன்னமும் திட்டுத் திட்டாகத் தெரிந்தது. "என்னம்மா?" என்று பரிவுடன் விசாரித்தான் அவன். ஐயா... நாடகக் கதையிலே, பொய்யாக ஒருவன் ஒரு வில்லன் என்னைக் கற்பழிச்சான் இப்போது நிஜமாகவே ஒருவன் என்னைக் கெடுத்திட்டானுங்க ஐயா!...." அவள் கையிலிருந்து அழகான டைரி ஒன்று கை நழுவியது. அம்பலத்தரசன் மெய் விதிர்த்து நின்றான். "ஐயையோ! அப்படியா!..."என்று பதட்டத்தோடு கேட்டான். அவன் குரலில் கட்டுக் கடங்காத கவலையும், ஆத்திரமும் இருந்தன. கேட்டுவிட்டு, மீண்டும் அவளுடைய முகத்தைப் பார்த்தான் அவன். இமைகள் படித்தன.