பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

13



பால் வழிந்த நிலவில் குளித்த அந்தப் பால் வழியும் வதனத்தில் இப்போது வைராக்கியத்தின் சுடர் ஒளிகாட்டித் திகழ்ந்தது. அடிபட்ட பெண்மானின் வேதனையையும் அவள் முகம் மறைத்துவிட முடியவில்லை. எழில் செழித்த அவளது மார்பகம் எம்பி எம்பித் தாழ்ந்தது. "உங்கள் அறை யென்று தெரிந்துதான் தப்பியோடி வந்தேன்... ஆமாம், என்னுடைய மானத்தைப் பறிகொடுத்திட்டு, உயிருக்குப் பயந்துதான் இப்போது ஓடோடி வந்திருக்கேன்!..." என்று செரு மினாள் ஊர்வசி. இமை வரம்புகளில் ஈரம் தட்டியது: கசிந்தது; வழிந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க, அம்பலத்தரசனுக்கு வியப்பு ஒரு பக்கம் ஏற்பட்டது: வேதனை மறுபுறம் உண்டானது. 'இப்போது நான் உங்களுக்காக என்ன செய்யவேணும், ஊர்வசி?" என்று பாசத்தோடு வினவினான். அவள் தன்னிடம் எதிர்பார்த்து வந்த உரிமையின் இனம் விளங்காத உரிமையின் உறவு பிரதி பலிக்கும் வகையில் அவன் பேச்சு அனுசரணை காட்டத் தவற வில்லை. ஊர்வசி நளினமாகச் சிரித்த வண்ணம் அவனை ஆழ்ந்து நோக்கினாள். - அந்தச் சரிப்பின் நளினம் அவனுக்கு மேடை நாயகி ஊர்வசியின் ஒயில் நகையை நினைவூட்டியது. ஓர் அரைக்கணம் அவன் தன்னை மறக்க வேண்டியவன் ஆனான். சிரிப்பு அலையலையாக விரியத் தொடங்கியது. அவன் தன்னுணர்வு எய்தினான். - "மிஸ்டர் அம்பலத்தரசன்!.... நீங்க இன்னைக்கி ராத்திரி நடந்த நாடகத்துக்கு வந்திருந்தீங்க... மேடை நாடகத்தில் நான் கற்பழிக்கப்பட்டபோது, அந்தத்துன்பம் தாளாமல், அம்பிகையைச் சரண் புகுந்தேன். பிற்பாடு, நான் தற்கொலை செஞ்சுக்கிட எண்ணி கடலைத் தஞ்சம் அடைஞ்சேன்!....ஆனால், இப்போது கற்பழிக்கப்பட அப்ாக்கியவதியாக நான் உங்க முன்னே நிற்கிறேன்! எனக்குத் தஞ்சம் தர அலையெறிகடல் இப்போதும் ரெடியாகக்