பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 8 பூவை எஸ். ஆறு முகம் பார்த்தபோது, பூமிநாதனின் முகம் இருந்திருந்தாற் போல சிந்தனையின் பிடியில் சிக்கியிருக்கக் கண்டான். "என்ன மிஸ்டர் பூமிநாதன், ! பலத்த சிந்தனையில் அமிழ்ந்திட்டீங்க?" என்று கேட்டான். சிந்தனை யின் கலவரம் மாறினாலும் அவனது கண்களின் கலக்கம் மாறவில்லை என்பதை அம்பலத்தரசனால் கணிக்கக் கூடாமல் இல்லை. "மறந்துவிட்டேனே! மிஸ் ஊர்வசி யின் நடிப்பு எப்படி இருந்துச்சுங்க, ஸார்?" - "பாவம், பரிதாயத்துக்குரிய பெண் அவள்!" என்றான் அம்பலத்தரசன். - பூமிநாதன் ஏனோ பதட்டம் அடைந்தான். பதட்டத்தின் சூடு மாறாமல், அம்பலத்தரசனை ஊடுருவி நோக்கினான். "நீங்க என்ன சொல்lங்க?" என்று கேள்வியைச் சொடுக்கினான் அவன். 'டெர்லின் சட்டையின் வெள்ளை நிறம் குழல் விளக்கில் மேலும் மின்னியது. அம்பலத்தரசனுக்கு அப்பொழுதுதான் தன் நா தடுமாறி விட்ட தவறு புரிந்தது. தவற்றை உணர்ந்த சிந்தையோடு, "ஆமாங்க. நாடகத்திலே ஊர்வசி யின் நிலை அப்படித்தானே ஆகிவிட்டது!..."என்று சமாளித்துக் கொண்டான். பிறகு, “ஊர்வசியின் நடிப்பைப் பத்திச் சொல்லனும் இல்லீங்களா? ரொம்பவும் அற்புதமாய் நடிச்சாங்க. நீங்க ஊர்வசியைக் கெடுக்க எத்தனம் செய்த போது, அந்தக் கண்டத்திலிருந்து தப்பிக்க அவங்க பட்டயாடும், பின்னாலே அந்தப் பழியிலிருந்து தப்ப வழியில்லாமல் கெடுக்கப்பட்டதை அறிஞ்சதும், அவங்க தன்னோட நிலைமையை எண்ணி மூச்சுவிடாமல் கண்ணிர் வடிச்சதும் ரொம்பவும் இயல்பாய் இருந்திச்சு.... அந்தப் பயங்கரக் காட்சிகளைக் கண்டதும், எனக்கு உங்களைக் கொன்று போட்டுப்பிட வேணும்னு ஒரு கொடுமையான ஆத்திரம் கூட வந்திச்சு! அவ்வளவு தொலைவுக்கு என் மனசு சலனம் அடைஞ்சிடுச்சு... ஒரு பெண்ணைக் கற்பழிக்கிறதும், ஒரு பெண்