பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

23



ஆற்றாமையோடு சொல்லிக்கொண்டாள். பிறகு, குரலில் சற்றே அழுத்தத்தைக் கூட்டி, "நீங்க வந்து நேரமாச்சோ?"என்று கேட்டாள் அவள். தான் வந்து சில வினாடிகள்தாம் ஆகியிருக்குமென்று மறுமொழி உதிர்த்தான் அவன் சொல்லிவிட்டு அவன் அவளைப் பார்த்தபோது, சரிந்து விழுந்த மார்பகச் சேலையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். சோளி மினுமினுத்தது. அவன் கண்கள் தாழ்ந்தன. அதே நேரத்தில், அவள் நயனங்களும் கீழே இறங்கி மேலே உயர்ந்தன. "மிஸ்டர் அம்பலத்தரசன்!" "சொல்லுங்கள் குமாரி ஊர்வசி!" "ஐயா, தயவு செஞ்சு என்னை ஊர்வசியென்றே அழைங்க இனி!" சற்றுமுன் அழைத்த அழைப்பில் இருந்த சத்து, இப்போதைய வேண்டுதலையில் வடிந்திருந்தது. அவன் பெரு மூச்சோடு ஆகட்டும்' எனச் சொல்லி, அவளை நன்றாகப் பார்வையிட்டான். அவள் அங்கு வந்தபோது, அவள் முகம் காட்டிய அந்தச் சலனம் இப்போது மறைந்து விட்டிருக்கக் கண்டான் அவன். அந்நிலை அவனுக்கு ஒரளவு ஆறுதலாகவும் இருந்தது. அமைதியையும் ஒரளவுக்கு அக்காட்சி கொடுத் திருக்கவும் கூடுமே! "நீங்க சாப்பிட்டீங்களா, என்ன?" என்று விசாரித்தாள் ஊர்வசி. பசுங்கிளியின் செங்கனி வாய்ச் சிவப்பு அவளுக்குச் சொந்தமான இதழ்களில் ஒட்டியிருந்தது. அச் சிவப்பில், மதுரமான முறுவல் கீற்றொன்று கோடுகிறுக்கிக் கிடந்தது. அவளுக்கே உரித்தான மோகனச் சிரிப்பாயிற்றே இது!' அவளைப் போல அவனுக்கு அத்துணை லாகவமாகப் புன்னகை செய்யத் தெரியாது. ஆனாலும் அவன் முறுவல் கோலம் ஏந்தினான். இயல்பாகவே அழகு பூத்திருந்த அவனது உதடுகளுக்கு அந்தப் புன்னகை மேலும் ஓர் அழகுக் கோலமாகவே அமைந்தது. "நான் உங்ககிட்டே கேட்க வேண்டிய கேள்வியை இப்போது நீங்க என்கிட்டே கேட்கிறீங்க... நான் நாடகம் முடிஞ்சு