பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பூவை எஸ். ஆறுமுகம்



வருறப்பவே பாலும் பழமும் பிராட்வேயில் சாப்பிட்டிட்டேன். உங்களுக்கு இப்போது தேவை எதுவென்று சொல்லுங்க" என்று கேட்டான். விருந்தோம்பல் பண்பு ஓங்கியது. "7675 ಟ್ರ இப்போ தேவையானது உங்க அன்புதான்." "அந்த அன்பு உங்களைப் பொறுத்தமட்டிலே எப்போதுமே உங்களுக்குக் கிடைக்கும்." “ரொம்ப நன்றிங்க. உங்க அன்பை இப்போதுதானா நான் அறிஞ்சிருக்கேன்?...." "சரி. இப்போ உங்களுக்குப் பாலும் பழமும் வாங்கி வருகிறேன்" என்று சொல்லி, ஃபிளாஸ்கை எடுத்தான் அம்பலத்தரசன். "நீங்க வீணாச் சிரமப்படாதீங்க. இப்போது நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற சிரமமே போதுமுங்க. எனக்குப் பசியில்லை. பசியை உணரத் தக்க நிலையிலே யும் நான் இல்லேங்க. என்னை மன்னிச்சிடுங்க! உங்க அன்புக் கையாலே ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்க, போதும்!" - அவன் கொடுத்தான். அவள் குடித்தாள். கூப்பிடு தூரத்திலிருந்தது டக்கர்'மாதாகோயில். அங்கிருந்து ஒலித்த மணிச்சத்தம் பன்னிரண்டு தவணை ஒரே சீராகக் கேட்டது. கடற்காற்றின் வாடை நயமாக இருந்தது. சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு, "சிகரெட்...." என்று இழுத்தான் அம்பலத்தரசன். அவனைத் தலை நிமிர்ந்து பார்த்த ஊர்வசி ஒயிலான சிலிர்ப்புச் சிரிப்புடன், எனக்குச் சிகரெட் வேண்டுமான்னு மரியாதைக்காகக் கேட்கlங்களா?... நாடகத்திலே அந்த வில்லன் செங்கோடனை ஏய்ப்பதற்காக சிகரெட் பற்றவைத்து நடிச்சேன். சிகரெட் என்றால் அவனுக்குப் பிடிக்காது என்று அறிந்த நான் அந்த உபாயத்தைக் கையாள வேண்டி வந்திச்சு. ஆனா, எனக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கமோ நாகரிமோ இன்னும் ஒட்டல்லேங்க. நீங்க பிடியுங்க!" என்றாள். .