பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

25



"நான் சிகரெட்' என்று தானே சொன்னேன்? அதாகப்பட்டது, நான் சிகரெட் பிடிக்கிறதிலே உங்களுக்கு யாதொரு ஆட்சேபனையும் இல்லையே என்கிறதைத் தெரிஞ்சுக்கத்தான் அப்படிக் கேட்டேன்", "பேஷாகப் பிடியுங்க." புகை சூழத் தொடங்கியது. "சொல்லுங்க!" "நான் இப்போது உங்ககிட்டே அடைக்கலப் பொருளாக வந்திருக்கேன்!..." . "அதைத்தான் சொன்னிங்களே முன்னமே?" "அப்படியானால், அந்த நிலையை நீங்க உணரலையா?" என்று குரலை உயர்த்திக் கேட்டாள் ஊர்வசி. "ஏன் அப்படிக் கேட்கநீங்க? உணர்கிறேனே. அந்த நெருக்கடி நிலைமையை!" என்று விடை அளித்தான் அம்பலத்தரசன். அவன் பேச்சு நின்றதும், அவனை உற்றுப் பார்த்தாள் அவள். அவனுடைய கண் விளிம்புகளிலே கண்ணிர் கரை கட்டி நின்றது. "ஐயா" என்னோடி நிலைமையை நீங்க உணர்ந்து கிட்டதற்காகவா இந்தக் கண்ணிர்?" கைந்நொடிப் பொழுது அவன் மெளனம் சாதித்தான். "அன்புக்கு ஒர் அடையாளம் வேணுமில்லே!" என்றான் அவன். அந்த அன்பை நம்பித்தான் நான் உங்க சந்நிதானத்தைத் தேடி வந்திருக்கேன்!..." அவள் நா தழுதழுத்தது. "சரி. நேரமாகுது. உங்களுக்கு அசதியும் களைப்பும் மிஞ்சியிருக்கும். இப்போது என் கடமை என்னான்னு சொல்லிடுங்க, ஊர்வசி...."முடிவுச் சொல் கோரும் பாவனை அப்பேச்சில் இருந்தது. ஊர்வசி விழிகளை நிமிர்த்தி அவனை ஊடுருவிப் பார்த்தாள். அவன் கண்களில் என்ன மாயத்தைத் தரிசித்தாளோ? அவளுடைய