பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பூவை எஸ். ஆறுமுகம்



கண்கள் புதிய ஒளி கூட்டித் திகழ்ந்தன. நீலப்பாதரஸ் விளக்கில் அவளுடைய அழகு முகம் மேலும் அழகுடன் விளங்கியது. "நான் உங்ககிட்டே அடைக்கலப் பொருளாய் வந்திருக்கேன். இந்த உண்மையை நீங்க உணர்ந்திருக்கீங்க. உணர்ந்திருக்கிறதாவும் உங்க வாயாலே சொல்லவும் சொன்னிங்க. பின்னே, நீங்க என்னை எதிர்க் கேள்வி கேட்கிறீங்க! அதான் எனக்கு மலைப்பைத் தருதுங்க!" என்று தாழ் குரலில் செப்பினாள். "உங்க பேச்சையும் உங்க நிலைமையையும் என்னாலே புரிஞ்சுக்க முடியுது: உணர்ந்துக்கவும் செய்கிறேன். ஆனா, உங்க முடிவைக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லிடுங்க. அதுதான் நம் இருவருக்குமே நல்லது!" "இன்றிரவு நடந்த வாழ்வதற்கே! என்ற நாடகத்தில் நான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு பொய்யான கட்டம் கதைக்கென உருவான சமயத்திலே, நான் எனக்குரிய முடிவை நானே தேடிக்க கொள்ள, கத்தும் கடலைச் சரணாகதி அடைஞ்சேன்!... அதுவும் கதைக்கான ஒரு பொய் முடிவு அது கதாசிரியர் மன்மதனின் முடிவு ஆனால், இப்போது நான் மெய்யாகவே கற்பழிக்கப்பட்டவள். எனக்கு மெய்யாகவே சாவதற்கு வழி தெரியும். ஆனால், சாக விரும் பல்லே! வாழ்வதற்கு ஆசைப்படுகிறேன்... ஆனதாலே வாழத்தான் வழி கேட்கிறேன் உங்ககிட்டே! என் தோல் விக்குப் பின்னாலேயும் ஒரு வாழ்க்கை இருக்குது; எனக்கேற்பட்ட களங்கத்துக்கு அப்பாலேயும் ஒரு கதை இருக்குது என்கிறது என்னோட சித்தாந்தம்... வாழவேனும், வாழ்ந்தாகவேனும் என்கிற ஒரு திடமான வைராக்கியத்தோடே நான் வந்திருக்கேன், உங்க நிழலை நாடி உங்க அன்பைத் தேடி!.... என்னுடைய முதல் நாடகமான காதலே, வா"விலே இப்படித்தான் ஒரு கட்டம் உருவாச்சு. எழுத்தாளர் ஒருவர் தன்னோட புரட்சிக் கருத்துக்களாலே பிரபலமானவர் எனக்கு அதாவது நாடகத்திலே வழுக்கி விழுந்தவளாக வந்த எனக்கு அன்பு தந்து, நிழல் தந்து என்னைத் தன்னோட இனிய பாதியாகவும் ஆக்கிக்கிட்டார். இந்த ஒரு நல்ல முடிவை வரவேற்பதாகவும், இம்மாதிரியான சூழ்நிலை பிரத் யட்ச வாழ்க்கையிலே உருவாகும் போது,