பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

27



நெஞ்சுள்ள வங்க தங்கள் தங்கள் கடமையைச் செய்து காட்ட முன் வரவேணுமென்றும் அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்கிய நீங்க சொன்னிங்க. அந்த ஒரு பேச்சுத்தான் இப்போது என்னை உங்க நிழலுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்குது...." யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல, அவள் பேசினாள்; உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள். அவளுக்கு யார் எழுதிக் கொடுப்பார்கள்? அவளது நெஞ்சுரம் எழுதிக் கொடுத்த வசனங்களை அவனிடம் அவள் ஒப்பு வித்தாள். அல்ல, ஒப்படைத்தாள்! அவ்வளவு தான்! சிலையாக மலைத்துப் போயிருந்தான் அம்பலத்தரசன். அவன் கண்களில் தீவிரமான சிந்தனை இருந்தது. நெற்றியில் பச்சை நரம்புகள் புடைத்திருந்தன. ஜிப்பாவைக் கழற்றி வீசினான். மேஜை மீதிருந்த சாம்பல் படிகத்தில் எரிந்து கொண்டிருந்த சிகரெட்டை மறந்து விட்டான். புதிய சிகரெட் ஒன்றைக் கொளுத்தினான். புகையும் புகைச்சல் இருமலும் ஒன்றாக வெளிப்படலாயின. வலது கை விரல்களும் ஆபத்துக்கு ஒத்தாசை செய்யத் தவறிவிடவில்லை! ஊர்வசி இருக்கையை விட்டு எழுந்தாள். சேலையைச் சீர் செய்துகொண்டாள். கழுத்தில் விளையாடிய தங்கச் சங்கிலியோடு ஒளிப் புள்ளிகள் விளையாடின. அவனை அண்டினாள். அமிர்தாஞ்சனத்தை வலதுகைப் பெருவிரல் கொண்டு எடுத்தாள். "இருங்க. நான் தடவித் தேய்த்து விடுகிறேன், என்னால் உண்டான தலைவலியை நான்தானுங்க தீர்க்க முடியும் இந்தப் பாவியாலேதான் உங்களுக்கு எத்தனை பெரிய சோதனை முளைச்சிருக்குது...." என்றாள். அன்பின் நெருக்கத்தோடு அவளைப் பார்த்த அவன் கண்கள் கண்ணிரில் மிதந்தன. - தலைவலிக் களிம்பைத் தடவினாள் அவள். "அழlங்களா நீங்களும்? நான் அழுதது போதாதுங்களா?" என்று கேட்டு விட்டு, அவளும் அழுதாள். - அவள் கண்ணிரைத் துடைத்து விட்டான் அவன்.