பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பூவை எஸ். ஆறுமுகம்



அவனுடைய கைகள் நிதானமாகச் செயற்பட்டன. அந்தக் கைகளை எடுத்துத் தன் கண்களில் பக்தியோடு ஒற்றிக் கொண்டாள் ஊர்வசி. வளைகள் குலுங்கின. "நீ பாவியல்ல இனிமேல்!..... இனிமேல் நீ பாக்கியவதி, ஊர்வசி!...” உத்தாரணம் ஆனது அவன் வாய்மொழிவாய்மை மொழி: அவள் மகிழ்ச்சிக் கண்ணிர் வடித்தாள். 'ஆஹா!... "நேரம் ஆகிடுச்சு. விடிஞ்சதும், மிச்சப் பேச்சை வச்சுக்கலாம். நீ இங்கே துங்கு. நான் வெளியிலே படுத்துக்கிறேன்!" என்று அறிவித்தான் அம்பலத்தரசன். - х "உங்களை நம்பியிருக்கிறவள் நான், நீங்களும் இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்!.... நம் இருவர் மனமும் நமக்குக் காவல் புரியட்டும்...." அண்ணல் மகாத்மா அருட் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார்.... ஒளி அணைந்தது. - அறையின் கதவுகள் திறந்தே கிடந்தன!....