பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை 3 J. தேடி வந்தாள் ஊர்வசி. தேடிவந்த தெய்வமா அவள்? விட்டகுறை தொட்டகுறை என்பார்களே, அந்தப் பந்தத்தின் விளைவா அது? அதன் விளைவாகத்தான் ஊர்வசி அவனைத் தேடி வந்தாளோ? ஒரு நினைவு மலர்ந்தது. ஊர்வசியை அவன் முதன் முதலாகச் சந்தித்தது. பொங்கல் திரு நாளில், - பாரதப் பிரதமர் லால் பகதுர் அவர்கள் அமரத்வம் பெற தாஷ்கண்ட் நாட்டைத் தெரிந்தெடுத்த அந்த விதிச் செயலை யொட்டி, சென்னை மாநகரத்தின் பொங்கல் கோலாகலங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டிருந்தன. என்றாலும் விளம்பரப்படுத்தப்பட்ட காதலே வா' என்ற நாடகம் மாத்திரம் அமரர் லால் பகதுருக்கு அஞ்சலி செலுத்திய நிறைவுடன் நடந்தது. அந்நாடகம் ஆரம்பமாவதற்கு முன்னம், அம்பலத்தரசனை க்ரீன் ரூ.மு க்கு அழைத்துச் சென்று அவனை அந்நாடக உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் நாடகப் பொறுப்பாளர் பூபதி. . பெண்களும் ஆண்களும் ஏழெட்டுப் பேர்கள் பழக்கப்படுத்தப்பட்டார்கள். - ஆனால், ஊர்வசி தான் அவன் நெஞ்சில் நின்றாள் நினைவில் நின்றாள். ళ్మీ . . . . . . உலகாளும் மாதாவாக அன்பின் அருள் பாலிக்கும் தெய்வமாக வேஷம் புனைந்திருந்தாள் ஊர்வசி, கதாநாயகனின் தந்தை பூஜை செய்வதற்காக, அவள் இவ்வாறு லோகத்தாயாகத் தோன்றினாள். மூன்று சீன் கழித்து, இவளே கதைக்கு நாயகி. ஆனால் அந்தத் தெய்வவடிவம் அவனுள் ஒரு பக்தியுணர்வையே உண்டுபண்ணியது. பிறந்த பச்சைக் குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை அவள் முகம் காட்டியது. கயல் விழிகளிலே ஒரு கனிவு. கனி இதழ்களிலே ஒரு பரிவு. செழித்த மார்பகத்தில் கச்சை அவள் பாங்கு சேரச் சிரித்து வணங்கினாள். அவளுக்கென்று. அப்படி ஒரு சிரிப்பா அந்தச் சீரார் சிரிப்பை நெஞ்சில் வாங்கிக்