பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பூவை எஸ். ஆறுமுகம்



குறுக்கு மறித்துப் பறந்த சைக்கிள் ஒன்று அவன் பேரில் மோதியது. அவனுக்குச் சுய நினைவை ஊட்டத் தான் அப்படி மோதியதோ? அவன் சுயஞாபகம் பெற்ற உண்மையை அறிந்ததும், சைக்கிள்காரன் கடலே கதி' என்று மீண்டும் பறந்து விட்டான். வே ஷ்டியைத் தட் டிவிட்டவனாக அங்கிருந்து புறப்படத் தயாரானான் அம்பலத்தரசன். பட்டணம் விழித்துக் கொண்ட பின், அவன் துங்கிக்கொண்டு இனிமேலும் அங்கே நின்று கொண்டிருக்க முடியுமா? அவன் புறப்பட்டான். புறப்பட்டவனின் முன்னே டாட்ஜ் எதிர்ப்பட்டது. பூமிநாதன் உள்ளே இருந்தான். கார் ஆடி அசைந்து நிற்க முனைந்தது. "லார், ஊர்வசியை ராத்திரியிலே யிருந்து காணலையாம்; அவங்க அம்மா சொன்னாங்க... பாவம்!"என்று தெரிவித்தான் பூமிநாதன். அவனது குரலின் துயரம் அம்பலத்தரசனின் நெஞ்சத்தைத் தொட்டது. "அட, பாவமே!" என்று வருத்தத்தைத் தெரிவித்தான். 'ஒரு ஹோட்டல் பாக்கியில்லை. தேடிப் பார்த்திட்டேன். விவரமும் கிடைக்கலே.... அவங்க மதர் என் வீட்டுக்கு ஃபோன் செஞ்சாங்க ராத்திரி!" என்று மேலும் விளக்கம் கொடுத்தான் சீமான் பெற்ற செல்வம். நண்பனிடம் நடப்பைச் சொல்லிவிட்டால் என்னவென்று துடித்தான் அம்பலத்தரசன். ஆனால், அச்செயல் அவ்வளவு விவேகமாகப்படவில்லை. ஆகவே, கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியவ்ன் ஆனான் அவன். பூமிநாதனின் கார் சீனத்துக் கடை வீதியை இலக்கு வைத்தது. அம்பலத்தரசன் மருள் கொண்டவனாக அப்படியே நின்றான். அதுவரை தோன்றாத புதிய புதிய பயங்கள் அவனை ஆட்கொள்ளத் தலைப்பட்டன. இரவு ஊர்வசி நடத்திய சோதனையில் வென்றவன், ஏன் இப்போது இப்படி வெலவெலத்துப் போய் நிற்கிறான்?.... தெய்வமே என் ஊர்வசியைக் காப்பாற்று நெஞ்சமே உன் ஊர்வசிக்கு விடிவு காட்டு!.... மனச்சாட்சியே! என் மனிதாபிமானத்தை ரட்சித்தருள்.... விடிகின்ற பொழுதுகள் தல்ல பொழுதுகளாகவே விடியட்டும்'..... விடித்தது.