பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்ஸிக்குச் சிறகுகள் இல்லை அல்லவா? பின், எப்படிப் பறந்தது அது? போர்த்துக்கீசிய மாதா கோவில் தெருவின் மையத்தில், வீதியின் மேலோரத்தில் நின்ற பண்டைய வேப்பமரத்து நிழலிலே கொலு வீற்றிருந்தாள் பூர் தண்டு மாரியம்மன். மிகவும் சக்தி படைத்த தாய் அவள் ஊராளும் உலகாளும் அன்னையின் சக்திக்குக் கேட்கவா வேண்டும்? அவள் சந்நிதியில் நின்றாள் ஊர்வசி. நின்றவ ள், கைகளைக் குவித்துக் கும் பிட்டாள். மாலை மாலையாகக் கண்ணிர் தொடுத்தாள். தன்னை மறந்த நிலையில் அவள் இருந்தாள். வினாடிகள் ஒன்று, இரண்டு என்று எண்களை உயர்த்திக் கொண்டிருந்தன. அவளது அக்கோலத்தைக் கண்ட அம்பலத்தரசன் ஒரு கணம் மனம் அதிர்ந்தான். "தாயே! ஏன் என்னை இப்படிச் சோதித்துவிட்டாய்? இப்போது என் தாய்க்கு நான் என்ன பதில் சொல்வேன்? எப்படிப் பதில் சொல்லப் போகிறேன்?" ஊர்வசி கண் மலர்ந்து, வாய்விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அபயக்கரம் ஏந்தி, அருட்சிரிப்பும் ஏந்தி, கூர்மிகு சூலாயுதமும் ஏந்திக் கல்லாய் நின்றாள் அம்மன். ஊர்வசி யின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லக் காணோம் கல் பேசாதா? தெய்வத்திற்குப் பேச வாய் இல்லையோ? அவனுக்கு மேனி புல்லரித்தது; கண்கள் குளமாயின. . செருமினாள் அவள். செக்கச்சிவந்திருந்த அதரங்கள் துடிதுடிக்கச் செருமினாள் அவள். காதளவோடிய கயல் விழிகள் துவளத் துவளச் செருமினாள். - அவள் அழுதாள்.