பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பூவை எஸ். ஆறுமுகம்



அவளை அவன் 'ழைத்துச் சென்றான். நீதியின் வாசலைக் கடக்கத் தனக்கு அருகதை இல்லை என்பதுபோல, அவள் தன் வீட்டின் வாசலில் எள்ளத்தனை பொழுது அப்படியே சிலையாகி நின்றாள். அவளைக் கைப்பிடித்து இட்டுச் சென்றான் அவன். வாசல் வழிவிட்டது. . குடியிருப்பு மனையின் முதற் பகுதி நிலைப்படியில் காத்துத் தவம் கிடந்த முதியவள் ஒருத்தி ஊர்வசியைக் கண்டவுடன் ஆனந்தக் கடலாடி, “ஊர்வசி!... வந்திட்டியாடி அம்மா? ராத்திரி முச்சூடும் என் வயித்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தேனே அம்மா?.... நல்லவேளை, என் வயித்திலே பாலை வார்த்தியே!" என்று ஆனந்தப் பெருமூச்செறிந்து, மகளை வரவேற்றாள்; கண்கள் கசிந்தன. வெள்ளைப் புடைவையின் நுனியைக் கொய்து மூக்கைத் துடைத்துக்கொண்டாள். "அம்மா!" என்று சொல்லிய ஊர்வசி தன் தாயின் மார்பில் சாய்ந்தாள். பிறகு, அம்பலத்தரசனைச் சுட்டிக்காட்டி இவங்களைத் தெரியுமில்ல, அம்மா?" என்றாள். - அப்பொழுதுதான் அம்பலத்தரசனைக் கவனித்தாள் இந்த அம்மாள்; "வாங்கய்யா. இவங்களையா தெரியாது?......நீ நடிச்ச மொதல் நாடகத்தைச் சிலாகிச்சு எழுதியவங்களாச்சே?"என்றாள். "ஒரு வாட்டி நான் இங்கே வந்தப்ப என்னை உங்க பொண்ணு அழைச்சிட்டு வந்தப்ப தஞ்சாவூர் டிக்ரி காப்பியாட்டமே காப்பி போட்டுக் குடுத்த மீனாட்சி அம்மாளை நான் மறக்கவே மாட்டேனுங்க!" என்று நன்றியறிவு மாறாமல் வெளியிட்டான் அம்பலத்தரசன். "வாம்மா, உள்ளே. நீங்களும் வாங்கய்யா" என்று கூறிக்கொண்டு, அவள் முன்னே நடந்தாள். கூடம் வந்தது. . உள்ளே இருந்த தண்ணீர்க் குடத்தை எடுத்து வெளிப்பக்கம் வைத்தாள். பாயை உதறிப் போட்டாள். 褒_。哆 哆 * * 球 o * - 尊 • உட்காருங்க, " என்று உபசரித்தாள் மீனாட்சி அம்மாள்.