பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை நாவல் இலக்கியம் இன்றைய தினம் நல்ல வளர்ச்சியைப் பெற்றுத் திகழ்கிறது. புதுமைப் படைப்புகளால் தமிழை அணி செய்யும் நல்ல நாவலாசிரியர்களுள் 'பூவை'க்குத் தனித்த இடமுண்டு. 'வட்டார மணம் கமழும் அவரது நாவல்களில் நெஞ்சைப் பறிகொடுத்த நான் அவரைத் ‘தமிழ்நாட்டு வில்லியம் ஃபாக்னர் என்று குறிப்பிடுவது வழக்கம். பண்பட்ட அவரது பேனாவின் மற்றொரு 'பிரசவம்' தான் இந்த நாவல். 'நீ சிரித்த வேளை - பிரச்சனைக்குரிய கதை. இக்கதையில் பூவை படைத்திருக்கும் ஊர்வசி ஒர் அற்புதமான பாத்திரம். “பிரச்னைகளுக்கு முன்னேதானே மனிதன் அக்கினிப் பிரவேசம் செய்யவேண்டியிருக்கிறது! அப்போதுதானே வாழ்க்கை எனும் வேள்வித் தீக்கும் மகிமை இருக்க முடியும்' என்று கூறும் ஆசிரியர் தனது ஊர்வசியின் வாழ்க்கையை ஓர் அக்கினிப் பிரவேசமாக சித்திரித்திருக்கிறார். வாழ்வில் ஒருவனால் கெடுக்கப்பட்டுவிட்ட அவள், தனக்கு ஏற்பட்டுவிட்ட களங்கத்தைக் கருதி மனம் குமுறினாலும், சாக விரும்பாமல், வாழவே துணிக்கிறாள். ஊர்வசியை நினைத்தபோது, பாலும் பாவையும் என்ற நாவலில் விந்தன் படைத்திருக்கும் அகல்யா எனது நினைவுக்கு வந்தாள். விந்தன் தன்னுடைய அகல்யாவை நிர்க்கதியாக விட்டுவிட்டதுமன்றி. அவளைப் போன்ற அபலைகள் விடிவு கண்டு வாழ வழி பெறுவார்கள் என்ற ஊகத்திற்குரிய தார்மீக அடிப்படையையும் சுட்டிக்காட்டாமலே முடித்துவிட்டார். பூவையோ, ஊர்வசியின் பிரச்னைக்கு வழியும் காட்டியிருக்கிறார். "விதிவசத்தால் கற்பு நிலை கெட்ட பெண்களுக்கு இந்த உலகத்தில் வாழ வழி இருக்க வேண்டும்; அவர்களை ஏற்று. ஆதரிக்கும் மனபலம் கொண்டவர்களும் நம் நாட்டில் இருக்க வேண்டும். அதுதான் மனித தர்மம்” என்று அவர்களுக்காகக் குரல் எழுப்புகின்றார். s ஊர்வசி மட்டுமின்றி, மனிதாபிமானத்தின் உருவமாகத் திகழும் அம்பலத்தரசன், தீக்குணம் கொண்ட பூமிநாதன் முதலியோரும் பூவையின் கைவண்ணத்தால் மின்னிப் பொலிகின்றனர். கதையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீ_சிரித்த_வேளை.pdf/5&oldid=792719" இலிருந்து மீள்விக்கப்பட்டது