பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பூவை எஸ். ஆறுமுகம்



பின் விளைவுகள் உனக்குப் புரியாதாம்மா? உன்னை மாலையும் கழுத்து மாப் பார்த்திட்டுச் சாகிறதுக்காகத்தான் தாயே, நான் என் உசிரை வச்சுக் கிட்டிருக்கேன்! சத்தியமாய் இதானம்மா நடப்பு கம்மனாட்டி வளர்த்த கழுசடைக்குட்டி என்கிற அவப்பேரை என்னாலே தாள முடியாதம்மா!.... சொல்லு ஊர்வசி என்ன நடந்திச்சு? எங்கே ராத்திரிப் பொழுதைக் கழிச்சே? ஏன் அயலிடத்திலே ராத்திரி தங்கினே? சொல்லு! ஊம். ...!" என்று கர்ஜித்தாள் மீனாட்சி அம்மாள். மீண்டும் மெளனம் காலத்தைக் கப ரீகரம் செய்யவே, அந்த நரக வேதனையை மேலும் வளர்த்த விரும்பவில்லை அந்த அம்மாள். "சொல்ல மாட்டே?” என்று ஓங்காரமாக முழங்கிக் கொண்டே, ஊர்வசியின் கன்னங்களில் பளீரென்று அறைந்தாள். ' ஊர்வசி விரக்தியோடும் அச்சத்தேர்டும் தன் அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தாள். "பாவி ஒருத்தன் என்னைப் பலாத்காரம் பண்ணிக் கெடுத்திட்டானம்மா!.... என்னை நான் காப்பாத்திக்கிட எத்தனை முயற்சி செஞ்சும், விதி அவனுக்குச் சாதகமாய் இருந்திடுச்சம்மா!... என்னைத் தெய்வம் ஏமாத்திடுச்சம்மா’ என்று கூக்குரல் பரப்பினாள் ஊர்வசி. பெற்றவ ளின் பாதங்களைச் சரணடைந்து கதறினாள் அவள். ஐயையோதெய்வமே!" என்று அலறினாள் மீனாட்சி அம்மாள். மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாள் அம் முதியவள். மாளாத விழிநீர் வழிந்தது. தளர்ந்திருந்த உடல் அல்லாடியது. பூகம்பம் வெடித்ததோ? - "அடி, பாவி என்னை உசிரோடே கொன்னுட்டியே?... கெட்ட கழுசடை அங்கிட்டே போய்க் கடலிலே விழுந்து சாகாமல், ஏன் எங்கண்ணிலே வந்து விழிச்சே?" என்று நல்ல பாம்பாய்ச் சீறினாள் மீனாட்சி அம்மாள். "அப்படிச் செத்துப் போயிடுறது இப்போதும் எனக்குச் சுலபம்தானம்மா! ஆனா, அப்படி நான் செத்திட்டாமாத்திரம், எனக்கு உண்டான அவப்பேரும், களங்கமும் மறைஞ்சிடுமாம்மா?