பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை 岳 மாதிரியே இளகுவாங்கன்னுதான் நம்புறேன்... மற்றவங்க எங்களைப் பத்தி என்ன நெனைச்சாலும், என்ன பேசினாலும் அதெல்லாம் ஒருபொருட்டல்ல எங்களுக்கு!... தான் ஏமாந்ததாலே, மனசொடிஞ்சு தற்கொலை முயற்சி எதையும் கையாளாமல் இருந்திச்சே ஊர்வசி, அதான் விதியின் விளையாட்டு!... அம்மா, இனிமே நீங்கதான் தர்மம் சொல்லுங்க உங்க முடிவை!... எங்க ரெண்டு பேர் வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் இனி உங்க வாக்கிலேதான் இருக்குங்க..." இதற்கு மேல் அவனுக்குப் பேசத் திராணி இல்லை. தொண்டையை அடைத்தது. கார்த்திகைபாலன் அபயக்கரம் காட்டினான்! சிறுகுழந்தை போலத் தேம்பிய மூதாட்டி மீனாட்சி அம்மாள், "மாப்பிள்ளை!...” என்று உணர்ச்சிச் செறிவுடன் புது உறவு சேர்த்து விளித்தாள். - அமைதி பூத்துப் புன்னகை பூத்தாள் ஊர்வசி. ஷார்ப் பில் இசைத் தட்டுகள் சுழலத் தொடங்கின! அப்போது, அந்த வீட்டு வாசலை விட்டு டாட்ஜ் புறப்பட்டுக் கொண்டிருந்தது.