பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

53



சதம் என்னும் முடிவாக, இந்நிலையை நான் ஏன் கருத வேண்டும்? ஆதரவற்ற நிலையில் அபலையாக வந்தாள் அவள்; உயிருக்குயிராகக் கட்டிக் காத்த கற்பைப் பறிகொடுத்த பரிதவிப்புடன் வந்தாள். சாகத் தெரிந்தவள் அவள். ஆனாலும், சாவை விரும்பவில்லை. வாழ்வை விரும்பினாள். அதன் காரணமாக, அவள் என்னை நம்பினாள்; அடைக்கலமானாள். அவள் நடித்த முதல் நாடகத்திலே வழுக்கிவிழுந்த அவளை ஏற்றுக்கொண்ட ஒர் எழுத்தாளரின் அந்தத் தர்மத்தை சிலாகித்துப் பேசிய என் தலைமைப் பேச்சை நம்பியே வந்தாள் என்னிடம். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டேன். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டேன். பிறவியின் கடமையை உணர்ந்தாள் ஊர்வசி. எனக்கும் பிறவியின் கடன் புரியும் அம்மா இம் முடிவை வாழ்த்துவார்கள்! அபலைகளுக்கு ஆதரவளிக்கும் லட்சிய நோக்கம் கொண்டவர்கள் அம்மா. ஆவணியில் முகூர்த்தம் வைப்பதற்கென்று தனக்குப் பிடித்த மருமகனையும் நிர்ணயம் செய்து இருக்கிறார்கள் அம்மா. அந்தப் பெண்ணின் படத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். அநேகமாக, கூடிய விரைவில் புறப்பட்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான், வந்ததும், எனக்குப் பிடித்த மருமகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். இனி, எனக்கு என் குடும்பத்தைப் பற்றியும், ஊர்வசியின் குடும்பத்தைப் பற்றியும்தான் கவலை. ஊர் வாய்க்கு மூடி ஏது? ஊர்வசிக்கு புனர்ஜென்மம் கொடுத்துவிட்டேன்; அவளுக்குப் புது வாழ்வு கொடுக்கப் போகிறேன்! இனி நான் நல்லவன். நல்லவனாகவே இனிமேல் இருப்பேன். இனி எனக்கு வாழ்வு என் ஊர்வசியேதான்!...' - . எண்ணங்கள் ஒடிநிலைத்தன. அவ்வுணர்ச்சிச் சுழலில் அவனது கவிதை மனம் விழிப்புக்கொண்டது! தொடக்கமே, அழகிய கவிதையாக வழியத் தலைப்பட்டது. ஊர்வசியின் சிரிப்பு அவன் மனத்தில் சிற்றலை எழுப்பியது. தன்னை மறந்தான். அப்போது: