பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பூவை எஸ். ஆறுமுகம்



"என்ன, தீவிரமான சிந்தனையிலே லயிச்சுட்டீங்களே மிஸ்டர் அம்பலத்தரசன்? பாலன்ஸ் oட்டை பூராவும் டைப் செய்திட்டு, பாக்கிச் சிந்தனையைத் தொடரக் கூடாதா?" என்று வருந்தினார் முதலாளி. இரும்புக் கிடையில் புழங்கிய மனிதர் அவர். செம்புதாஸ் தெருவில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவர் தின்று போட்ட கொட்டைதான் இப்படி இரும்புக்கடையாக உருமாறிவிட்டதோ, என்னவோ? "மன்னிச்சிடுங்க என்னை. ஏதோ சிந்தனை" என்று தன் தவற்றை உணர்ந்து ஒப்புதல் தெரிவித்த திம்மதியுடன், ரெமிங்க்டனை'ச் சரணடைந்தான் அவன் அம்பலத்தரசன். சாவி கொடுக்கப்பட்ட காலக்கடிகாரம், ஒழுக்கம் கெடாமல் பணி இயற்றுவதே ஒரு விந்தைதான்! பாலன்ஸ் oட்' மூன்றாம் தடவைதான் உருப்படியாக உருப் பெற்றது. . . சாப்பாட்டு வேளை வந்தது. அம்பலத்தரசன் சாப்பாட்டுக்கு மண்ணடிக்கு விரைந்தான். சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது. ஆனால், அவனோ ஊர்வசியின் கடிதத்தைப் பிரித்துப் படிப்பதில் ஈடுபட்டான். கடிதம் பேசுகிறது: அன்பிற்குரியீர்! பறிக்கப்பூட்டு விட்ட பெண்மையின் அலறல் அமைதிப்பட்ட நிலைமையில் நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கறைப்பட்ட பெண்ணாக நான் உங்களை நம்பி வந்தேன். என் நம்பிக்கையை நீங்கள் காத்துத் தந்துவிட்டீர்கள். அந்த ஒரு புண்ணியத்துக்கு நன்றி தெரிவிக்கவும் இவ்வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன். - - என்னை ஆள வந்த தெய்வமாக நீங்கள் எனக்குத் தரிசனம் தருகிறீர்கள். என் நிமித்தம், என் களங்கத்தையெல்லாம் வலிய ஏற்கத் துணிந்த உங்களது மனிதத்தன்மையை