பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

55



மனிதாபிமானத்தை என் ஆயுள் பரியந்தம் மறக்கவே முடியாது; மறக்கவும் மாட்டேன். உங்கள் கடமை பொற்பு மிகுந்தது! எனக்கென ஒரு காப்பு வேண்டுமென்று நான் பல காலமாகவே கனவு கண்டு வந்திருக்கிறேன். அந்தக் காப்பு காலங்கடந்து எனக்குக் கிட்டியிருக்கிறது. நான் நடித்த முதல் நாடகத்துக்குத் தலைமை தாங்கினர்கள் நீங்கள். வழுக்கி விழுந்தவளாக நான் நாடகத்தில் நடித்தபோது, கற்பு நிலை தவறிய என்னை நாடகத்தில் அவ்வாறு ஆக்கப்பட்ட என்னை நாடகத்தில் ஏற்றுக்கொள்ள முன்வந்த கதாசிரியரின் சமூகப்பணிச் சீர்திருத்தத்தைத் தாங்கள் வெகுவாகப் பாராட்டினீர்கள். இம்மாதிரி, விதி வசத்தால் கெட்ட நிலை அடைந்த அபலைகளைச் செயல் முறையிலும் ஆதரிக்கும் நிலை வளர வேண்டும் எனவும் தாங்கள் காந்திஜீயின் உரையை உதாரணம் காட்டிப் பேசினீர்கள், - அந்தப் பேச்சு என் நெஞ்சத்தைத் தொட்டது. அப்போதே, தாங்கள் என் நெஞ்சில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்களை ஒரு முறை அப்புறம் வழியில் சந்தித்து என் இல்லத்துக்கு அழைத்து வந்தபோது, என் இதயத்தைத் தங்களிடம் திறந்து காட்ட வேண்டுமென்று துடித்தேன். ஏதோ ஒன்று அப்போது தடுத்துவிட்டது. அதற்குப் பெயர்தான் விதியோ? இப்போதுதான் என்னுடைய அந்தக் கனவு பலிதமடைந்திருக்கிறது. - நான் மோசம் போன அபாக்கியவதி. சாகத்தான் இருந்தேன். ஆனால், என் அன்னையின் நினைவும், ஏமாற்றப்பட்ட என் பெண்மையின் வெஞ்சினமும் என்னைச் சாக அனுமதிக்க மறுத்தன. - - நாடகம் முடிந்தது. என் நாடகக் கோலத்தை அழித்துக் கொண்டிருந்தேன்