பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பூவை எஸ். ஆறுமுகம் நான். என் சொந்த உடைகளைத் தரித்துக்கொண்டு புறப்பட ஆயத்தப்பட்டேன். அப்போது நல்லவன் ஒருவன் அக்கணம் வரை நல்லவனாகவே நடந்து கொண்ட ஒருவன், தனக்கு மயக்கமாக இருப்பதாகச் சொல்லி என் உதவியைக் கோரினான். நாடக அரங்கில் வேறு ஓர் ஈ, காக்கை கூட இல்லை அப்போது. நான் அவனுக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதுவரை மனிதனாக இருந்த அவன், rணப்பித்தம் கொண்ட நிலையில் மிருகமாக மாறி, என்னை மடக்கிப் போட்டுத் தன் வெறியைத் தணித்துக் கொண்டு விட்டுப் பறந்துவிட்டான். என் நகங்களாலும் பற்களாலும் கூட என்னைக் காப்பாற்ற இயலாமல் போயிற்று. அந்தப்பாவியை அந்த மிருகத்தை அந்தத் துரோகியைப் பழிவாங்கியே தீருவேன்! அந்த ஒரு கடமைக்காகவே, நான் உயிரோடு இருக்க வேண்டும்! அந்தப் பாவியைத் தாங்களும் அறிவீர்கள். ஆனால், அவன் பெயரை நானாகச் சொல்லும் காலம் வரை, நீங்களாக என்னை அவன் பெயரைச் சொல்லும்படி துண்டக் கூடாது. ஒர் ஆணையையும் உங்கள் முன்னே வைக்கிறேன். என்னைப் பற்றி நம்பிக்கை குறைந்தாலோ, அல்லது என்னைப் பற்றிய நல்லெண்ணம் மாறினாலோ, எப்போது வேண்டுமானாலும் தாங்கள் என்னை நிராகரித்துவிடலாம். இதற்கு நான் மனப்பூர்வமாக இணங்குகிறேன். இப்போது பத்திரிகைக்கதைகள் சில என் நினைவிற்கு வருகின்றன. - வழுக்கி விழுந்த ஒர் அபலையின் வயிற்றுப் பிள்ளைக்குத் தந்தையாக இருக்கமட்டுமே ஒப்புகிறான் ஒர் அறிவாளி. ஆனால் அந்தத் துரதிருஷ்டக்காரிக்கு நிரந்தரக் கணவனாக மட்டும் இருக்க ஒப்பவில்லை அவன் இப்படி ஒரு கதை, இன்னொன்று: