பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

57



கெடுக்கப்படுகிறவள் ஒர் அழகுக்குமரி. அவள் தலையில் ஒரு குடம் தண்ணீரைக் கொட்டி அவளது கறை படிந்த கற்பைத் துய்மைப்படுத்துகிறாளாம் அவள் தாய். வினோதமமான பண்பாடாகத் தோன்றவில்லையா இது? இந்தக் கதையைப் படித்துவிட்டு அந்தத் தாய்க்காகக் கண்ணிர் சொரிந்தேன் நான், . மற்றொரு கதை: பெண் ஒருத்தி களங்கமடைகிறாள். அவளை ஆதரிக்கத் துணிகிறான் ஒருவன். ஆனால், அவனுடைய மனம், சமையல் காரனின் வாய் வேதாந்தத்தால் மாறி, அந்த அபலையைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டுக் கதவைத தாளிட்டுக் கொண்டு விடுகிறான் அவன். கோழை அவன்!. இந்தக் கதைகளிலே, ஒன்றாவது வாழ்க்கையைச் சொல்கின்றதா? ஊஹல்ம்! கதை, வாழ்க்கையாகவே மாற வேண்டும்! வாழ்க்கையே கதையாக அமைய வேண்டும்! நான் நாடகக்காரி. ஆனாலும், இன்று இரவு பத்து மணிவரை, நான் பண்பும் பண்பாடும் கொண்டவளாகவே ஒழுகி வந்தேன். மீண்டும் சொல்கிறேன்: நான் நிரபராதி! இது சத்தியம்... ஒரு விண்ணப்பம். விதி வசத்தால் என் வயிற்றில் 'கரு' உருப்பெற்றால் அந்த ஒரு முடிவுக்குக் குறுக்காகத் தாங்கள் நிற்கவே கூடாது! r . . . . - நம்மிடை புதிரோ, பிரச்னையோ, சிக்கலோ எழக் கூடாது. அதற்காகவே இந்த லெட்டர். . எஸ். ஊர்வசி." கடிதத்தை உறைக்குள் திணித்துச் சட்டைப் பையில் செருகிக்கொண்டான் அம்பலத்தரசன். நெஞ்செலும்பு உருகியது. கண்ணிர்ச்சொட்டுகள் தெறித்தன!