பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அம்பலத்தரசனின் கருத்தைத் தாங்கிய 'பூ' ஏடு, அம்பலத்தரசனின் பார்வைக்கென வந்து காத்திருந்தது. மாடிக் கதவைத் திறந்ததும் அவன் பார்வையில் விழுந்தது அந்தப் பத்திரிகைதான். 'பூ' காரியாலயப் பையன் கொணர்ந்து போட்டுச் சென்றிருந்தான். கார்டு ஒன்றும் கிடந்தது. எடுத்தான். அவனுக்குத் தெரிந்த நண்பன் இரங்கநாதன் எழுதியிருந்தான். 'இ' போடாமல் தன் பெயரை எழுதமாட்டான் அந்த நண்பன். சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிப் போயிருப்பவன், ஏதோ அரசாங்க இண்டர்வ் யூ விஷயமாக வருவதாகவும், தங்குவதற்கு ஒரே ஒரு நாள் மாத்திரம் அறையில் இடம் கொடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தான் இரங்கநாதன். இரங்க அம்பலத்தரசன் தயாரானான். பிறகுக்காக இரக்கம் காட்டுவதென்பது அவனது ரத்தத் தோடு ஒட்டிய குணமாக அவனுக்கு அமைந்திருந்தது. உங்களைப் போல நல்லவர்கள் நாலு ரெண்டு பேர் இந்தப் பூலோகத்திலே இருக்கக் கண்டு தான் மிஸ்டர் அம்பலத்தரசன், மழைகூடப் பெய்கிறது' என்று அவனுக்குப் புகழ் மாலை சூட்டு வார்கள் அவன் தோழர்கள். அந்தி வெயில் சிந்துர வண்ணம் காட்டியது. - அறையைத் திறந்து வந்து சோபாவில் சாய்ந்தான் அவன். அறையைச் சுற்றிச்சூழக் கண்ணோட்டமிட்டான். ஊர்வசி இல்லாத அறை வெறிச்சோடிக் கிடப்பதாகவே அவனுக்குத் தோற்றமளித்தது. அந்நினைவு அவன் இதயத்தை என்னவோ செய்தது. வேதனை சாடியது மனத்தை, வெய்துயிர்ப்பு விளைந்தது. அலுவல் முடிந்த கையோடு ஊர்வசியின் இல்லத்துக்குச் சென்று திரும்ப வேண்டுமென்றுதான் நினைத்திருந்தான் அவன். ஆனால், அறைக்கு வரவேண்டி வந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவனது உற்ற நண்பனான பூமிநாதன் இங்கு மாலையில் வருவதாகத் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தான்.