பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பூவை எஸ். ஆறுமுகம்



இச்செய்தியை அவனுக்குச் சொல்லவும் அவன் அலுவல் மனை உதவியது. காலையில் ஊர்வசியின் வீட்டில் நடந்த ராஜோபசாரத்தை நினைத்தான். அந்நினைவில் புத்துருக்கு நெய் மணத்தது. சீரகச் சம்பா இட்டிலியும் புதினாத்துகையலும் சுவை கூட்டின. அத்துடன், ஊர்வசியின் கொள்ளை அன்பும் அவன் மனத்தைக் கொள்ளை கொண்டது. மதியச் சாப்பாட்டையும் அலுவல் பார்க்கும் இடத்துக்கு அனுப்பி வைப்பதாக மன்றாடினாள் மீனாட்சி அம்மாள். ஆவணி பிறந்து அப்படிச் செய்து கொள்வதே உசிதமென்று சொல்லி விட்டான் அவன். சட்டையைக் கழற்றிப் போட்டான் அம்பலத்தரசன். சட்டைப்பையில் இருந்த ஊர்வசியின் கடிதத்தை மறந்துவிடாமல் தோல் பெட்டியின் அடியில் வைத்துவிட்டு மூடப்போன சமயத்தில், மேலே தெரிந்த புகைப்படத்தைக் கண்டான். அதை எடுத்துப் பார்க்க நினைத்தவன், அவ்வாறு செய்யாமல், அதைப் பெட்டியின் அடியில் போட்டு வைத்தான். அந்த நிழற்படத்தை காலையில் ஊர்வசி பார்க்க நேர்ந்ததையும் அவன் மறந்துவிடமாட்டான். இந்தப் படத்தை ஒரு நாளைக்கு நூறு தர்மாவது பார்க்காமல் இருந்ததில்லையே அவன்?... இப்போது 'பூ' அவன் கண்களை உறுத்தியது. வாழ்வதற்கே' விமர்சனம் மிகவும் நேர்த்தியாக இருந்த தென்று அவனுக்குத் தெரிந்தவர்களும் அவனைத் தெரிந்தவர்களும் சொன்னார்கள். விமரிசனம் நேர்த்தியாக இருக்க வேண்டுமென்றுதான் அவனுக்குச் சம்மானமாக மாதத்திற்கு நூறு ரூபாய் தரப்படுகிறது என்கிற விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ, என்னவோ? யார் கண்டார்கள்? தன் நாடக விமரிசனத்தை ஒரு முறை மேலோட்டமாகப் பார்த்தான் அம்பலத்தரசன். שי - "...நாடகத்திற்கு நாயகியாக அமைந்திட்ட குமாரி ஊர்வசி மிகவும் இயல்பாகத் தோன்றினார். பண்பட்ட நடிப்புத்திறம் அவரிடம் சுடர்விட்டது. நயவஞ்சகன் ஒருவனால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்படவிருந்த கட்டத்தில், அவன் நடத்தும் போராட்டமும்