பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பூவை எஸ். ஆறுமுகம்



பிறப்புரிமையாகக் கொண்ட பாங்கில் அவரது நடிப்பு இருந்தது. மனிதனுள்ளே மிருகமும் வாசம் செய்யும் என்னும் உட்கருத்தைச் செம்மைப்படவே நிரூபணம் செய்து காட்டிவிட்டார் அந்த அன்பர்! நாயகனாக நடித்தவர் நம் அனுதாபத்துக்குரியவர். விதியைச் சாடும் நெஞ்சுரம் உள்ளவன்தான், காதல் எனும் புனித வலையையும் விரிக்கத் தகுதி பெற முடியும். தியாகம் என்கிற திறனும் எல்லோருக்கும் வந்துவிடாது. காதலித்தவளைக் கைவிட்டுவிடும் பத்தாம் பசலியாகக் காட்சி தரும் அவர் அழகனாக மட்டுமே தோன்றுகிறார். கோழையாகவே நாம் அவரை மதிப்பிடுகிறோம். கோழைகளுக்காக வாழ்வே இல்லை! வேடதாரிகளுக்கும் வாழ்வு இல்லை! எந்த ஒரு நிலையிலும், எந்த ஒர் அபவாதத்தையும் ஏற்கஅப்படி ஏற்பதால் இன்னொரு ஜீவனுக்கு வாழ்வு கொடுக்க முடியுமென்கிற புண்ணியக் கடமை காத்திருக்கு மென்று தோன்றினால், அத்தகைய அவதுறை ஏற்கச் சித்தமாக இருக்க வேண்டும் மனிதன்!... அதுவேதான், நாகரிமான சமுதாயத் தொண்டாக ஆகமுடியும் தமிழ்ப்பண்பாட்டுக்கு இந்நிலை மூலம் ஒரு புதிய பொருளும் கிடைக்குமல்லவா? * . . இக்கருத்தைச் செயற்படுத்த இக்கதாசிரியர் இனியேனும் முயல்வாராக!..." - - விமரிசனம் முடிந்தது. மின்விசைப் பொத்தான், விளக்கை ஏற்றியது. கையெடுத்துக் கும்பிட்டான் அம்பலத்தரசன். ஊர்வசியின் அழகிய, நிர்மலமான முகம் அவனது மனத்தின் கண்களில் நிழலாட்டம் போட்டது. தன்னை மறந்து இரவு தூங்கிய அந்தப் புனித எழிலை அவனால் எப்படி மறக்கக்கூடும்? படுத்தவன், தூக்கம் பிடிக்காமல் எழுந்தபோது, அவள் அலங்கோலமான உறக்கத்தில் கட்டுண்டிருந்தாள். மார்பகத்திலே காணப்பட்ட நகத் தழும்புகள் அவன் நோக்கில் பட்டன. ஒரு கணம், அவன் கலங்கினான். ஆனால் மறுகணம், அவனது மனத்தின் ஒரு முடுக்கில் வாசம் செய்த பழைய மிருகவெறி கிளர்ந்தெழுந்தது. அவளையே