பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பூவை எஸ். ஆறுமுகம்



பாட்டுக் கிடைத்தது: "நீ சிரித்த வேளை அது-வாழ்வில் நீ சிலிர்த்த வேளை அது! கனவென்று வந்து, கனவே நீயாகிக் கனவென்று சிரித்தாய் நீ-இன்பக் கனவென்றெ களித்தாய் நீ! நனவென்று வந்து, நனவே நீயாகி நனவுக்கு விழியானாய் நீ அன்பின் நனவுக்கே வழியானாய் நீ! "நான் சிரித்த வேளை அது-வாழ்வில் நான் சிலிர்த்த வேளை அது! என்னுள் நிலைத்து, உன்னுள் நெகிழ்ந்து, என்னுள் உயிரீந்தாய் நீ அன்பால் என்னுள் உயிரானாய் நீ! உன்னுள் நிலைத்து, என்னுள் நெகிழ்ந்து உன்னுள் உயிர் கண்டாய் நீ-என்னை உன்னுள் உயிர்கொண்டாய் நீ! நீ சிரித்த வேளை அது!-வாழ்வில் நான் சிலிர்த்த வேளை அது!... பேனாவைக் கீழே வைத்தான் அம்பலத்தரசன். ஊர்வசியின் நெஞ்சத்திற்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மீண்டான், அம்பலத்தரசன், அந்தச் சித்து விளையாட்டு ஒரு நல்ல கவிதையை அவனுக்குக் கொடுத்துவிட்டதல்லவா? - பூமிநாதனை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அம்பலத்தரசன். அவனைப் பார்த்துவிட்டு, ஊர்வசியைச் சந்திக்கச் செல்லவேண்டுமென்பது அவன் கருத்து. பங்களாவுக்கும் கடிகாரத்துக்கும் ஒட்டுறவு இருக்க வேண்டாமா? - 33