பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பூவை எஸ். ஆறுமுகம்



இரண்டு: "...பெண் ஒருத்தி அழகாக இருந்துவிட்டால், உடனே அவளைக் காதலிக்கவும் காதல் கடிதம் எழுதவும் தொடங்கி விடுகிறது இளவட்டக்கூட்டம். எல்லாம் சினிமாவினால் வந்த வினை! அதற்காகத்தான், பெரியார் சினிமாவே கூடாது என்றார் போலிருக்கிறது! பத்து நாளாக என்னையே சுற்றிச் சுற்றி வந்தான் தறுதலை ஒருவன். என் நாடகத்தைக் கண்டு என்மீது காதல் கொண்டுவிட்டானாம். பணக்காரனாம்!... நல்ல டோஸ்’ கொடுத்துவிட்டேன். என்னைப் பழிவாங்கியே சாவதாகச் சூள் உரைத்துச் சென்றான்... அவன் பெயர்: நாகசாமி.' மூன்று: . ...காதலே, வா' நாடகம் ஐம்பதாவது நாளாக நடத்தப் பெற்றது. மான்புக்குரிய டாக்டர் கலைஞர் தலைமை தாங்கினார். எனக்கு நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகச் சோதிடம் சொல்லப்பட்டது!" நான்கு: - ... வாழ்வதற்கே' என்னும் புதிய நாடகத்தில் வில்லனாக நடிக்கும் பூமிநாதன் அவர்கள் ரொம்பவும் தங்கமானவர். நான் கற்பழிக்கப்படும் கட்டத்தின் ஒத்திகை இன்று நடைபெற்றது. ‘என்னைத் தயவுசெய்து மன்னித்து விடுங்கள்' என்று சொல்லிவிட்டு, நாணயத்தோடு ஒத்திகையில் ஈடுபட்டார். பணக்காரப் பிள்ளையானாலும், மிகுந்த அன்புடன் பழகுகிறார் அமைதியான மனிதருக்கு எப்படிப்பட்ட அருவருப்பான பாத்திரம் கிடைத்திருக்கிறது, நாடகத்திலே!...பாவம்! ...' ஐந்து: - ...கில்லாடி ஒருவனின் கன்னத்தில் எண்ணி இரண்டு அறைகள் கொடுத்தேன்! ...' - 呜驴; . ... இன்று அரங்கேற்றப்பட்ட வாழ்வதற்கே நாடகத்தில் எனக்கு நல்ல புகழ் கிடைத்தது.