பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துகிறேன் வாழ்த்துங்கள்...! படைப்பின் தவமே ஒரு தத்துவம் ஆகிறது. அதுவே, படைப்பிற்கு ஒரு விதியாகவும் அமைகிறது - அமைக்கப்படுகிறது. ஆகவேதான். படைக்கின்ற ஆண்டவன் சூத்திரதாரியாகவும், படைக்கப்படுகின்ற ஜீவன்கள் அலகிலா விளையாட்டுடைய அந்தச் சூத்திரதாரியின் விளையாட்டுப் பொம்மைகளாகவும் ஆகின்றன. ஆக்கப்படுகின்றன. இதுவே, உலகத் தருமத்திற்குப்பொதுவிதியாகவும் அமையும். உலக வாழ்க்கையின் பொதுவான நியதியும் இதுவே அல்லவா! வாழ்க்கை ஒரு சத்தியச் சோதனை - சத்தியம் சோதிக்கும் போதும், அந்தச் சத்தியம் சோதிக்கப் படும்போதும் தான், வாழ்க்கை, வாங்கு வாழுகின்ற வாழ்க்கையாகச் சமூகப்பிரக்ஞையுடன் அமையும்: அமைய முடியும்; அமையவும் வேண்டும். உயிர் வாழ்வதற்காகவே விதிக்கப்பட்ட அதிகாரபூர்வமானதும், ஆத்மார்த்தமானதுமான மண்வாழ்க்கை, பொய்யான இம்மண்ணிலே நடக்கும் அல்லது, நடத்தப்படும் மெய்யான வாழ்க்கையின் பொன்விடியல் பூபாளமாக இனிக்கும்போதுதான், வாழ்க்கையே ஒரு கதையாகவும் ஆகிவிடுகிறது! ஆடி அடங்கும் இந்த வாழ்க்கைக் கதையின் ஆடி அடங்காத இந்தக் கதை வாழ்க்கையின் சித்திர விசித்திரங்கள், அந்த முதல் பிரம்மாவுக்குத்தான் வெளிச்சம் என்பதல்ல. இரண்டாம் பிரம்மாவான எனக்கும் வெளிச்சம்தான்! - - . அன்று நான் சொன்னதை, இன்று நான் மறுபடி சொல்லிப் பார்க்கிறேன்: . . . . - “பெண் ஒரு புதிரல்லள் அவள் ஒரு புரட்சிப் பொன்விடியல்! தெய்வம் ஒரு விதியல்ல; அது ஒரு சத்தியத் தருமம்! . . . . குழந்தை ஒரு கனவல்ல அது ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீ_சிரித்த_வேளை.pdf/7&oldid=792742" இலிருந்து மீள்விக்கப்பட்டது