பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

பூவை எஸ். ஆறுமுகம்



மனம் என்னும் வேள்வியைக் கொண்டு செலுத்த, வாழ்க்கை என்னும் தீக்கு, தியாகம் என்னும் ஆஹல்தியைப் பயன்படுத்தும் பக்குவம்' அவனுள் பண்படத் தலைப்பட்டது. இயல்பாகவே அவனது உதிரத்தில் நிலைத்துப் பரவியிருந்த மனிதாபிமானம் மனிதத்தன்மையும் இந்நிலைக்கு என்றென்றும் கைகொடுக்கும் என்றும் அவன் நம்பினான். இனி எனக்கு ஊர்வசிதான் ஆணை, அவள் இஷ்டம்தான், என் எதிர்கால வாழ்வு' என்ற முடிவும் அவனுள் உருப் பெற்றிருந்தது. தன்னைப் பலிகொண்ட நீசனை அவள் ஏன் காட்டிக் கொடுக்க மறுக்கிறாள்? தன்னைக் கெடுத்த பாவி எனக்குத் தெரிந்த ஆள்தான் என்று கோடி காட்டியிருந்தாளே எனக்கு நண்பனாக் இருக்கும் ஒருவனா இந்தப் படு பாதகத்தைச் செய்தான்?. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்றே நிர்ணயிக்கக் கூடவில்லையே?...' அவன் உள்ளம் தவித்தது. நிலவுக்கென்று ஒரு கவர்ச்சியா? இத்தகைய கவர்ச்சிக்கும் தானே களங்கம் வந்து விடுகிறது? அர்த்தமுள்ள சிந்தனையாக அவனுக்குத் தோன்றியது, இந் நினைவு. - அப்போது, தொலைபேசி அழைப்பொன்று வந்தது. பூமிநாதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவனிடம் பூமிநாதன் அங்கு வந்தானாவென்று விசாரித்தார். பூமிநாதனின் தந்தையான சீமான் சாந்தமூர்த்தி. விவரத்தைச்சுட்டினான் அம்பலத்தரசன். சரி இனிமேல் பூமிநாதனை இங்கு நான் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பது வீண். பணக்காரப்பிள்ளைக்கு ஆயிரம் ஜோலிகள் இருக்கும். டாட்ஜ் கையிலிருக்கையில், தந்தையை டாட்ஜ்' செய்வதில் வியப்பேது?... ஊர்வசி என்னை எதிர்பார்த்திருப்பாள், பாவம்' என்று எண்ணி முடித்துப் புறப்பட்டான், அம்பலத்தரசன். அவன் எண்ணத்துக்கு வாய்த்த தூண்டுதலாக, அவனை உடன் எதிர்பார்த்திருப்பதாகத் தொலைபேசி மூலம் தெரிவித்தாள் ஊர்வசி. மகிழ்வின் புதுக்கனவுடன் அங்கிருந்து கிளம்பினான் அம்பலத்தரசன். உடன்' என்று அவள் சுட்டிய அவசரம்' அவனது உள்ளத்தின் உள்ளே பரபரப்பை ஊட்டிக் கொண்டேயிருந்தது. பட்டணம் ராஜகம்பீரத்துடன் பொலிந்தது.