பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

71



கருணாநிதி என்று பெயர். மேல்மட்டப் பிள்ளை. அவனுக்கு உத்தியோகம், பொழுதைக் கழிப்பது. அதாவது, பொன்னான காலத்தைக் கொல்வது அவன் கண்டனுபவிக்காத பொன்னா, என்ன? "உங்க ட்ராமா ரெவ்யூ ரொம்ப நேர்த்தியாய் இருந்திச்சு, அம்பலத்தரசன்!" என்றான் கருணாநிதி. “ரொம்ப சந்தோஷம்,கருணாநிதி!" என்றான் அம்பலத்தரசன். ஆனால் அவன் மகிழ்ச்சியடைவில்லை. மாறாக ஒரு வகை அருவருப்புத் தோன்றியது அவனுடைய முகத்திலே! "ஆனால் ஒரு சந்தேகம், மிஸ்டர் அம்பலத்தரசன்!..." "சொல்லலாமே!" “ஊர்வசி கற்பழிக்கப்படுகிறாள்..." என்று கருணாநிதி எடுத்த எடுப்பில் பேச்சைத் தொடங்கவே, அம்பலத்தரசனுக்கு அப்பேச்சைக் கேட்டதும், பிரமிப்பு உண்டாகிவிட்டது. உடனே சமாளித்துக் கொண்டான், "அதாவது நீங்க நாடகத்தைப்பற்றிப் பேசுறீங்க, இல்லையா?"என்று குறுக்கிட்டான்; நினைவூட்டினான். "ஓ மை குட்னஸ்!... ஆமாம். நாடகத்திலே அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டதைப் பார்த்த ஞாபகத்திலே, அந்தப் பெண்ணோட அசல் பெயரையே சொல்லிட்டேன். பரவாயில்லை!... ஊம், நாடகக் கதாநாயகி பலாத்காரமாய்க் கற்பழிக்கப்படுகிறாள்!... சரி. அவள் தன்னுணர்வு அடைஞ்சதும், உடனே அவள் அலைகடலை நாடிச் சரணடைகிறாள்! இது கதையோட நாடக முடிவு. ஆனா, இந்த முடிவு நம்மோட தமிழ்ப்பண்பாட்டை ஒட்டி அமைஞ்சிருந்திச்சு. இதுதான் நடக்க வேண்டியது! இல்லீங்களா?... ஆனால், நீங்க இந்த முடிவை ஆதரிக்கலே. அப்படித்தான் உங்க க்ரிட்டிலிலமும் அமைஞ்சிருந்திச்சு நீங்க சொல்லுற அந்த முடிவுப்படி அந்த நாடகம் முடிஞ்சிருந்திருந்தால், அப்புறம் நம்ம தமிழ்ப் பண்பாடு என்ன ஆகிறது?... இதான் என் சந்தேகம்..." என்று சொல்லி நிறுத்தினான் கருணாநிதி. அம்பலத்தரசன் அவனை உறுத்துப் பார்த்தான். பார்த்துவிட்டு வேதனையோடு சிரித்தான். முதலிலே என் சந்தேகத்துக்குத்