பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

73



"கெட்ட பெண்களுக்கல்ல, தங்களையும் மீறிக் கெடுக்கப்பட்ட பெண்களுக்கு இந்த உலகத்திலே தாராளமாக இடம் உண்டு. இதுதான் என் வாதம்!... கெட்ட பெண்களைப் பற்றிய பிரச்னையை இப்போது நாம் பேசவேண்டியதில்லை. அது ஒரு தனி உலகம்!... இப்போ நான் பேசுறது, பிறராலே வலுக்கட்டாயமாகக் கற்பழிக்கப்பட்ட அபலைப் பெண்களைப் பத்தித்தான்!... அத்தகைய பெண்களை ஆதரிக்க நம் தமிழ்ப் பண்பாடு பழகிக்கிடவேணும். உண்மையான உள்ளம் கொண்டவங்களும் நமக்கு முன்னே இந்தப் புரட்சியைத் தான் உண்டாக்கிக் காட்டியிருக்காங்க!, நிரூபிச்சும் காட்டியிருக்காங்க!... 'அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லே'ன்னு சொல்லியிருக்கார் வள்ளுவர். அவர் வாக்கு, நான் சொல்லுற இந்தப் புதுக் கருத்துக்கும் சாட்சியாக அமையட்டுமே!... பிறப்பு என்கிறது ஒரு கடமை. அந்தக் கடமையோடுதான் பிரம்மா சிருஷ்டிக்கிறான். அவன் தத்துவத்துக்கு விரோதமாய் இயங்குவதற்கு இந்தப் பிறப்புக்கு எவ்வித அதிகாரமும் இருக்கக் கூடாது!... 'வாழ்க்கை வாழ்வதற்கு!' அப்படின்னு சொல்லுறதாலே மட்டும், தமிழ்ப்பண்பாடு வாழ்ந்துவிட முடியாது!... விதி வசத்தாலே கற்புநிலை கெட்ட பெண்களுக்கும் இந்த உலகத்திலே வாழ வழியிருக்க வேண்டும். இது அவங்களுடைய உரிமை; பிறப்புரிமை! அதற்கு உண்டான வழி வகைகளையும் நம் சமுதாயம் செஞ்சுக் கிட்டு வராமல் இல்லை. அவர்களுக்கு நிழலாக ஆசிரமங்கள் இருக்கு. இது மட்டும் போதாது! அவங்களை ஏற்று ஆதரிக்கும் மனப்பலம் கொண்டவங்களும் நம் நாட்டிலே வளரவேணும்!... அதுதான் மனித தர்மமும் கூட. அதுவேதான் நான் சுட்டுகிற, தமிழ்ப்பண்பாடுமாகும்" அம்பலத்தரசனுக்கு இருமல் வந்தது. மேலும் ஒரு சிகரெட் பற்றிக் கொண்டது. இருமலின் தொடர் சுயநலம் கடந்தது. “ரொம்பவும் பயமான கருத்து உங்களுடையது" என்று தீர்ப்பளித்தான் கருணாநிதி. "உங்க மாதிரி உள்ளவங்களுக்கு உலகம் என்றாலே எப்போதுமே ஒரு பயம் இருக் அதெல்லாம் சுத்த ஹம்பக். வெறும் நா.