பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

75



பாவத்தை மறந்து, நீங்க மேலும் நடிச்சால், அப்பவே உங்களைக் கடிச்சுக் குதறி உங்க உயிரைக் குடிச்சுமிருப்பேன்!... எனக்காகக் காத்திருக்கும் முடிவு எனக்குத் துச்சம் சட்டம் குருடாகலாம்; ஆனா, தெய்வம் ஒரு போதும் கபோதியல்ல!... கற்பு என்கிறது பெண்ணுக்குள்ள தனிச் சொத்து மட்டுமல்ல, ஆணுக்கும் உள்ள தனிச் சொத்துத்தான்!... ஒரு அபலையின் வாழ்வு, உங்களோட மோகவெறியாலே உங்களோட rணநேர மிருக வெறியாலே அநியாயமாய்ப் பாழடைஞ்சு போச்சு! அந்தச் சரித்திரமும் பாழடைஞ்சு போயிட்டதாய் நினைச்சிருக்கீங்க நீங்க பாவம்'..." ரத்தக் களறியாக அம்பலத்தரசனின் முகம் விளங்கியது. அவன் ஆத்திரம் சுடர்விட, கருணாநிதியை நோக்கினான். அப்போது, கருணாநிதி ஏதும் மறுமொழி உதிர்க்காமல், வெஞ்சினம் கொப்புளிக்க, தன் வலது கன்னத்திலே அந்தக் கன்னி ஓங்கி அறைந்ததை உணர்ந்துகொண்டான். அவனது ரத்த நாளங்கள் துடித்தன. பால்கடைக் கூட்டம் அவர்களைச் சூழ்ந்தது. அம்பலத்தரசனின் கண்கள் கனல் கக்கின. மறுகணம், கருணாநிதியின் தலைமுடியைப் பிடித்துக் கீழே தள்ளி, அவன் கன்னங்களில் மாறி மாறி மாற்றி மாற்றி அறைந்தான் அம்பலத்தரசன். "நீ இப்போது பயப்படு!... உன் வேசம் கலைந்ததை இதோ, வேடிக்கை பார்க்குதே ஒரு கூட்டம், அதுதான் உலகம், சமூகம் எல்லாம். நீ கற்பழிச்ச அந்த அபலைப் பெண்ணோட சாபம்தான் இப்போது என் ரூபத்திலே வந்து உன்னை மூச்சந்தியிலே பழிவாங்கியிருக்குது... தெய்வத்துக்கும் மனச்சாட்சிக்கும் பயப்படப் பழகாதவன் கதி இதுதான்!.... ஒடு!.... ஒடிப்போய் உன் பணப் பெட்டியைத் தஞ்சம் அடை!... உன் பணம் என்னை என்ன செய்கிறதின்னு பார்க்கிறேன்!... ஊம், ஒடு.." என்று ஆவேசமாகக் கூச்சலிட்டான் அம்பலத்தரசன். ஒரு கணம், கருணாநிதி தலை குனிந்தான்!... அடுத்த கணம் அவனுடைய பற்கள் நறநற வென்று சத்தமிட்டன.