பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பூவை எஸ் ஆறுமுகம் மூன்ற ாவது கணத்தில் கருணாநிதியின் லாம்ப்ரெட்டா காரினும் கடிது சென்றது. அம்பலத்தரசன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, சிகரெட்டை எரியவிட்ட வண்ணம் நகரலானான். அப்போது ரிக்கrாவாலா ஒருவன் அம்பலத்தரசனிடம் ஒடி வந்து, "ஷார்! நீங்கள்தான் தெய்வம்... சாமி!" என்று சொல்லி, கவனிப்பாரற்றுக் கிடந்த அந்தப் பாழடைந்த கோயிலைச் சுட்டிக் காட்டினான். பெர்க்லி தலையை நீட்டியது. உடன் வரும்படி ஊர்வசி வேண்டிக்கொண்டதற்கா இந்தச் சோதனை? - சோதனையா இது!' ஆம்; கருணாநிதிக்கு இது சோதனை! ஆனால், இது என்னுடைய கடமையின் சாதனை அல்லவா? ....' தலை நிமிர்ந்து அவன் நடந்தான். '... கற்பு என்கிறது பெண்ணுக்குள்ள தனிச்சொத்து மட்டுமல்ல!... ஆணுக்கும் உள்ள தனிச் சொத்துத்தான்!...' தான் கருணாநிதியிடம் எடுத்துக்காட்டிய அக்கருத்து, இப்பொழுது தன்னையே விழுங்கிக் கொண்டிருந்ததை துல்லியமாக உணர்ந்துகொண்டிருந்தான் அம்பலத்தரசன். அவனது உந்திக் கமலம் வடித்த ரத்தக் கண்ணிர் அவன் மனச்சாட்சியைக் கழுவிக்கொண்டிருந்ததோ? 'ஊர்வசி, நீ என்னை மன்னிப்பாயா? வேதனையின் கழுவாயில் அவன் துன்பம் துடித்தது. ஒர் ஆங்கிலேய இந்தியர் மனையில் கடிகாரம் எட்டு அடித்தது. - ஊர்வசி சிரிக்க மறந்த வேளை ஏது?