பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் ஆனந்த மெய்ப்பாடு! காதல் ஒரு விளையாட்டல்ல: அது ஒர் உண்மைத் தவம்! வாழ்க்கை ஒரு சோதனையல்ல; அது ஒரு சாதனை ” 26IIi aust! அதிசயமான இந்தப் பெயரிலே தேவலோகப் பாரிஜாதம் மணக்கும்! உண்மைதான் - அவள் மண்ணில் பூத்த அழகுப் பாரிஜாதப்பூ! - புதிய பூயாளத்தின் புதிதான புரட்சிப் பொன்விடியல் ஆயிற்றே!. அவள் தமிழ்ச் சாதித் தமிழச்சி! பண் பாடுகின்ற தமிழ்ப் பண்பாடு அவனை வாழ்த்தட்டும்! ஆணிப் பொன்முத்தாக ஒளிசிந்தும் அழகி ஊர்வசியின் கதை புதிது; புதுமையானதும் கூட 'நீ சிரித்த வேளை! என்கிற என்னுடைய இந்நவீனத்திலே, அந்த நாடகக்காரி காலத்தை வென்று வாழ்ந்தாள்: திரிகரண சுத்தியுடன் வாழ்ந்தும் காட்டினாள்! - தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் மெய்ப்படும் வரலாறு, அபலை ஊர்வசியை நிச்சயம் மறக்காது; மறக்க முடியாது; மறக்கவும் கூடாது! இயேசு கிறிஸ்துவின் அமரவாக்கு பலித்தது - தட்டினேன்; திறக்கப்பட்டது. என்னுடைய இலக்கியப் பணிக்கு இது பொன்விழா ஆண்டு! கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் பூத்த அன்பிற்கும் பாசத்திற்கும் கூட, இது பொன்விழா ஆண்டுதான்! பிரச்சனைகளின் திருச்சந்நிதியிலேதான் மனிதன் அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டியிருக்கிறது! இதற்கு உதாரணம் சொல்ல நான் போதும். உங்கள் அருமைப் பூவையின் இறுதி நாட்கள் இவை! இவ்வுண்மை, எனக்குக் கசக்காதுதான்! . . . வெண்ணெய் திரண்டுவரும் போது, தாழி மட்டிலுந்தான் உடையுமா, என்ன? - என் மணிவிழாவின் கதையும் அதுவே தான்! Tென்னுடைய எழுபத்தோராவது பிறந்தநாள் விழாவுக்குப் பேர் சொல்லி அடையாளம் காட்டுகின்ற என்னுடைய இந்நவீனத்தை அழகுக்கு அழகு சேர்க்கும் நெறிமுறையிலே சிறப்பாகவே வெளிப்படுத்தும் மகாகவி பதிப்பகத்தினருக்கு நான் மட்டுமல்லாமல், என் குடும்பத்தினரும் நாளும் பொழுதும் கடமைப்பட்டிருப்போம்! கடன்பட்டும் இருப்போம்! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீ_சிரித்த_வேளை.pdf/8&oldid=792754" இலிருந்து மீள்விக்கப்பட்டது