பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பூவை எஸ். ஆறுமுகம்



'தர்மத்தை உணர்த்தியதுக்கு எனக்கு ஏச்சும் பேச்சும் கிடைச்சது! தர்மத்தை உணராததுக்கு அவனுக்கு மாறிமாறி அறை கிடச்சது!" என்று ஆறாத வேதனையோடு பேசினான் அவன். "அந்தப்பாவி கடைசியிலே உங்க கிட்ட சவால் விட்டதும், 'தன்னிஷ்டமில்லாமல் கெடுக்கப்பட்ட அபலைப் பெண்ணுக்குக் கட்டாயம் வாழ்வு தருவேன், அந்த மனம் எனக்கு இருக்குது' அப்படின்னு நீங்க விடை சொன்னவுடனேயே நான் வந்து, 'இதோ பாரய்ய உதாரணப் பொருளை, அப்படின்னு நிரூபிக்கத்தான் எனக்கு மனசு துடிச்சுது. ஆனால், அதுக்குள்ளே, பேச்சு தடம் மாறிப் போகையிலே நான் கம்முன்னு நின்னிட்டேன்!... உங்க விமர்சனத்துக்கு அப்பாலேயும் நீங்க நல்ல நல்ல கருத்துக்களைச் சொன்னிங்க... ஆனால், இப்படிப்பட்ட பாவிகளையுந்தானே பூமிமாதா பொறுமையோடு தாங்கிக்கிட்டு இருக்கிறாள்?..." பேசிவிட்டு அவள் சிந்தனை வசப்பட்டாள். அவளது முகத்தின் எழில் மங்கி வந்தது. அவளது முகமாற்றம் உள்ளத்துச் சலனம் காரணமாக ஏற்பட்டிருந்த முகமாற்றம் அவனுக்குப் புரிந்தது. "ஊர்வசி...'பாவிகளுக்கும் துரோகிகளுக்கும் இதயமற்ற மிருகங்களுக்கும், தர்மமும் தெய்வமும் கூலி கொடுக்காமல் தப்பாது!... ஆமா, தண்டனை கொடுக்காமல் தப்பவே முடியாது!... மனச்சாட்சிக்குப் பதில் சொல்லாமல், தெய்வத்துக்கும் தர்மதேவதைக்கும் பதில் சொல்லாமல் தப்பிச்சிடுறவங்களுக்கு நம்மைப்போல் உள்ளவங்கதான் தண்டனை கொடுத்தாகவேனும்!...” என்று உத்வேகத்தோடு எடுத்துக்காட்டினான் அம்பலத்தரசன். இப்பேச்சைக் கேட்டதும், அவளது முகச் சலனம் சமன்நிலை அடைந்தது. "நம்மைப் போல் உள்ள வங்களாலேதான் பாவிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவும் முடியும் நீங்க சொன்ன பேச்சு நூற்றுக்கு நூறு மெய்தானுங்க!" என்றாள் ஊர்வசி. தீவிரமானதொரு வைராக்கியப்பண்பு அவளுள் கனன்று கொண்டிருந்ததை அவளது குரல் கோடிட்டுக் காட்டியதோ? பற்களை நறநற'வென்று கடித்துக் கொண்டாள். மறுபடியும் பழைய சலனம் கோடு கிழித்தது, அவள் வதனக்கிழியில்.