பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை 8置 ஊர்வசியைத் தொடர்ந்து உள்ளே சென்றான் அம்பலத்தரசன். அவன் கால்கள் பின்னுக்கு இழுத்தன. சமாளித்த படி உள்ளே நுழைந்தான். உடல் நலிந்தும் அழகு நலியாமல், படுத்த படுக்கையாகக் கிடந்தாள் பெண் ஒருத்தி. அவளைப் பார்த்தான் அம்பலத்தரசன். பார்த்த மாத்திரத்திலே, அவனிடமிருந்து கண்ணிர் பெருகியது. "உங்களுக்குச் சொந்தமா இந்தப் பெண்?" "சொந்தம் போலத்தான். சற்று முன்னே சொன்னேனே என்னோட பழைய திருவிளையாடலைப் பத்தி, அந்த விளையாட்டிலே பங்குகொண்ட இவளும் என் தோழிகளிலே ஒருத்தி!...” என்று சூட்சுமமாகச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணின் தலைமாட்டில் குந்தினான் அம்பலத்தரசன். ஸ்மரணை தப்பிக் கிடந்த அவளது நெற்றியைத் தொட்டுப் பார்க்க அவன் கைகள் விரைந்தன. ஆனால் மறுகண்ம் அவன் கரங்கள் பின்னடைந்தன. அவன் மேனி நடுங்க, குரல் நடுங்க, "மங்கையர்க்கரசி!" என்று கூப்பிட்டான். குரலின் முதல் தொடுப்பிலேயே அந்த மங்கையர்க்கரசி' விழித்துக்கொண்டாள். "ஆ, நீங்களா? வந்திட்டீங்களா? நல்லா இருக்கீங்களா?" என்று குசலம் விசாரித்தாள். ஜீவனற்ற சிரிப்பு, வெளுத்த உதடுகளில் இழைந்தது. அவள் அன்பு கறைபடாதது. அது அவன் அன்பைத் தொட்டது. "நான் நல்லா இருக்கேன். ஆனா, நீ நல்லா இல்லையே?’ என்று தேம்பினான். "நான் இப்போ அனாதையுங்க. என்னை எல்லாகும் கை விட்டுப்புட்டாங்க. கடைசியாக எனக்கு உங்க யாபகம் வந்திச்சு. ஆனா, உங்க இடம் எனக்குத் தெரியாது. காலம்பற நீங்க இங்கே வந்ததாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னாள். இந்தக் காய்ச்சலோட வந்தேன் உங்களைத் தேடி... தொட்டுப் பாருங்க, உடம்பு கொதிக்குது..." . . ". . . . . அவன் மெளனமாக வீற்றிருந்தான்.