பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

83



அவங்க சொல்லுவாங்க கதையை, ஆமா, கதையை' ஊர்வசி தடு மாறினாள். ஐந்தாறு நிமிஷங்கள் சென்றபின்னரே மீனாட்சி அம்மாள் வந்தாள். வந்த வள், ஹார்லிக்ஸ் கலந்திருந்த தம்ளரை மங்கையர்க்க ரசிக்குக் கொடுத்தாள். காப்பித் தம்ளரை அம்பலத்தரசனிடம் சமர்ப்பித்தாள். "ரெண்டு பேரும் சாப்பிடுங்க!" என்று உபசரித்தாள் ஊர்வசி. "தங்கச்சிக்கு!"... என்று கேட்டாள் மங்கையர்க்கரசி. "நான் கொடுக்கமாட்டேனா?" என்று உரிமை பற்றினான் அம்பலத்தரசன். பாதிக் காப்பி மீதிக் காப்பி ஊர்வசிக்குக் கிடைத்துவிட்டது. அம்பலத்தரசன் பொய் சொல்வானா? "அக்கா இங்கேயே தங்கட்டும்" என்றாள் ஊர்வசி. "வேணாம். மங்கையர்க்கரசியை தங்கசாலையிலே எனக்குத் தெரிஞ்ச டாக்டரம்மாளோட நர்ஸிங்ஹோமிலே சேர்த்திட்டு வந்திடுறேன். அதுதான் நல்லது!..." என்று எழுந்தான் அவன்; எழுந்து, நடந்து, மீண்டும் திரும்பினான். டாக்சியில் திரும்பினான் அவன். மங்கையர்க்கரசியைப் பதனமாக வாடகைக்காரில் ஏற்றிவிட்டார்கள் தாயும் மகளும். கையெடுத்துக் கும்பிட்டு விடைபெற்றாள் மங்கையர்க்கரசி. கண்முனைக் கசிவு நிற்கவில்லை. "போய் வருகிறேன் ஊர்வசி. உன்கிட்டே நிரம்பப் பேசவேணும், " என்றான் அம்பலத்தரசன். - "சரிங்க... ராத்திரி சாப்பாடு இங்கேதான். சீக்கிரம் வந்திடுங்க. உங்களுக்குப் பிடித்தமான கோழிப் பிரியாணி தயாராகிறது!... உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்போம்!” என்று அன்பால் எச்சரித்தாள் ஊர்வசி. வெண்முத்துப் பற்களிலே பிறை ஒளிர்ந்தது; ஒளிந்தது. • , , "உத்தரவு டியர்!" பெண் மானாகக் கண்களைச் சிமிட்டினாள் ஊர்வசி!