பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

91



நாணமும் நாணமும் முயங்கின. அவன் புறப்பட எழும்பினான். "இங்கேயே நீங்க படுத்திருக்கலாமே, அத்தான்?" மெல்லொலியில் சொன்னாள் ஊர்வசி. "ஆவணி பிறந்திடட்டும், ஊர்வசி!... "மெல்லொலியில் சிரித்தான் அம்பலத்தரசன். - அவளுடைய மார்பகத்தில் பதிந்திருந்த தங்கச் சங்கிலியின் பதக்கம் ஊசலாடிக்கொண்டிருந்தது. "நான் இப்போது சொன்னதானது சாதாரண அர்த்தத்திலேதானுங்களே!" "நம் இதயங்கள் வாழத் தொடங்கிவிட்டன. நாம் வாழத் தொடங்குவதற்காகத்தான் ஆவணியை எதிர்பார்க்கிறேன். நானும் சாதாரணமாகத்தான் சொன்னேன்." - நேற்றிரவு அவர்கள் இருவரும் கண்ணுறங்கிய அந்தப் புனிதப் பொழுது, அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் நிழலாடிக் காட்டியதோ? ‘போய் வரட்டுமா?" "போய் வாருங்கள்." "நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. நீ என் அறைப்பக்கம் வாயேன், பேசிக் கொண்டிருப்போம்!" - "உத்தரவு, டியர்!" - - - உதட்டுப் புன்னகையைக் கண்கள் ஏந்தின. பர்மால்லிப்பர்கள் மறையத் தொடங்கிப்பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும்!