பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

93



கைப்பிடித்துச் சென்றான் காதலன். புதிய காதல் உறவு இணைத்த புது இணையாக அவர்கள் இருக்கலாம். அடுத்த விபத்தையும் சமாளித்தபடி அவன் ஹோட்டலைக் குறிவைத்து நடந்தான். ஹோட்டல் வாசலில் பிச்சைக்காரி ஒருத்தி தன் பிள்ளைக் குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தன்னைக் கண்டதும், "தரும தொரையே!" என்று பல்லை இளித்தாள். அவளுக்கு விளம்பரப் பல்பொடியின் அருமை தெரியாது போலும் அவன் சிரித்துக் கொண்டே ஒரு ரூபாயை அந்தத் தாய்க்குப் போட்டான். வெறிநாய் ஒன்று விழுந்தடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியது. அவன் சுற்றிலும் ஒரு முறை கண்ணோட்டம் பதித்தான். மனிதர்களிலே வெறியர்களைத் தடம் கண்டுகொள்வது இயலாத காரியம் போலிருக்கிறதே? - ராமபவன் இட்டிலி என்றால் அம்பலத்தரசனுக்கு ஒரு பிடித்தம். இட்டிலிக்கு ஊற்றப்படும் சட்டினியின் மீதுள்ள பற்றுத்தான் இட்டிலியின் மீதும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டுத் திரும்பினான்; பில்"லை மட்டும் வாங்கிக் கொள்ளும் ஹோட்டல் அல்ல அது!....' வெற்றிலை பாக்குக் கடைக்கு வந்தான். இதுவும் அவனுக்கு ஒரு வாடிக்கைக்கடை. இலக்கியச் சர்ச்சைக்குகந்த இடம் அது. அமரர் புதுமைப்பித்தனுக்கு அந்நாளில் இம்மாதிரியான வாடிக்கைக் கடைகள் அதிகம் இருந்ததாக அவர் சொல்லக் கேட்டதுண்டு. கடையின் அதிபர் அந்தக் கடைக்கு வாய்த்த நல்ல விளம்பரம். மனிதர் கும்பகோணம் வெற்றிலையைக் காம்புகிள்ளி நரம்பு நீக்கிப் போட்டுக் கொண்டு, பன்னீர்ப் புகையிலையை உள்ளடக்கிப் பேசும் பேச்சைப் பார்த்தால், தாம்பூலப் பித்து யாரையும் ஒரு கலக்குக் கலக்கியே தீரும். அம்பலத்தரசனும் இப்படிப்பட்ட பழக்கத்துக்கு அடிபணிந்தவன் தான். வெற்றிலை தரித்துக்கொண்டான் அவன். நீட்டப்பட்ட சிகரெட்டை வாங்கிய அவன், ஊர்வசியின் ஆக்ஞை யைச் சிந்தையிற் கொண்டதும், அதைத் திருப்பிக் கொடுத்தான். கடைக்காரர் அதிசயம் பூத்தார்.