பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பூவை எஸ். ஆறுமுகம்



'சரி இந்த வருஷம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சார்பிலே தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசளிக்கப்பட்டதே. அதைப் பற்றி இந்தப் பத்திரிக்கைக்காரர்கள் அவ்வளவு தூரம் உரிய விளம்பரம் கொடுக்கலையே, கவனிச்சிங்களா லார்?" என்று கேட்டார் கடை முதலாளி. "வாஸ்தவந்தான். இரண்டொரு ஏடுகள் நல்ல முறையில் பாராட்டி எழுதின. இரண்டொரு கட்டின வீட்டுக்குக் குறை சொல்லவென்று கடுவன் பூனையாட்டம் காத்திருந்து குறை சொல்லவும் தவறவில்லையே? அதையும் கவனிச்சிங்களா, சாமிநாதன்?" . "ஆமாம்; அதுதான் நம் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்டு வருகிற ஒரு தலைவலியாச்சே?.... இப்பத்தான் ஞாபகம் வருது: தமிழிலே நாடக இலக்கியம் உண்டாகவில்லையாம். இப்படியும் ஒரு சாரார் பேசிக்கொண்டுதானே வருகிறாங்க... இவங்களுக்கு நீங்க இன்னும் பலமான ஒரு அடி கொடுக்க வேணுமுங்க, உங்க 'பூ' மூலம்1. தட்டிக் கேட்கிறதுக்கு ஆள் இல்லாட்டா, தம்பி சண்டப்பிரசண்டன்னு நம்ம ஜில்லாப் பக்கத்திலே ஒரு பேச்சு உண்டில்லையா? அதன் பிரகாரம், அப்போதைக்கப்போது, குறை சொல்லுறவங்களுக்கு மண்டையிலே அடிச்சாத்தான் நல்ல புத்தி வரும். தமிழிலே நாடக இலக்கியம் தொன்றுதொட்டு வளர்ந்து, வாழ்ந்து வருகிற உண்மையைப்பத்தி நீங்க எடுத்துச் சொன்னதாகவும், இந்நாளிலே நடத்தப்படும் அமெச்சூர் நாடகங்கள் எத்தனையோ நாடக வளர்ச்சிக்கு உதவுகிற நடப்பை நீங்க சுட்டிச் சொன்னதாகவும் பூமிநாதன் நேற்றுக் காலம்பற எங்கிட்ட ஞாபகப்படுத்தினார்." "அப்படியா? பேஷ், பேஷ்!" பூமிநாதனின் பெயரைக் கேட்டதும், அவன் தன்னைச் சந்திக்க இரவு வருவதாகத் தெரிவித்து வராமல் போன விவரத்தை அம்பலத்தரசன் எண்ண வேண்டியவன். ஆனான். - கூடிய சீக்கிரம் உங்க இஷ்டப்படியே ஒரு விமர்சனக்கட்டுரை எழுதிடுறேன். எனக்கும் அந்தத் தூண்டுதல் ரொம்ப நாளாய் இருந்துகிட்டுத்தான் வருது.'